சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் அண்ணா தெருவில் எச்.டி.எப்.சி வங்கி ஏ.டி.எம் மை 19ம் தேதி யில் சிசிடிவி பழுது பார்க்க பிரகாஷ் என்கிற ஊழியர் ஈடுபட்டார்,
அப்போது ஏ.சி உள்பகுதி இயந்திரத்தில் தீபற்றியதால் பிரகாஷ் வெளியேறினார்,
தீயணைப்பு வாகனத்தில் தீயை அணைத்த நிலையில் ஏ.டி.எம் முழுவதும்ம் எரிந்தது, மேலும் கட்டிட உள்பகுதி முழுவதிலும் சேதமானது,
எச்.டி.எப்.சி வங்கி சார்பில் அந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 500 ரூபாய் இருக்க வேண்டும் ஆனால் ரூபாய் தாள்கள் எரிந்ததா ? தப்பியதா ? என அதிகாரிகள் தரப்பில் கேள்வி எழுந்தது,
ஆனால் ஆனால் இயந்திரத்தை உடைத்து திறக்க நான்கு நாட்கள் கழித்து
வங்கியின்
உதவி துணைத்தலைவர் ரத்தினவேல்,
ஏ.ஜி.எம் இரோநெட் சர்விஸ் ராஜேஷ்குமார், சிட்லப்பாக்கம் உதவி காவல் ஆய்வாளர் கந்தவேல் முன்னிலையில் ஊழியர்கள் ஈடுபட்டனர்,
முக்கிய லாக்கரை உடைத்து பார்த்தபோது 500 ரூபாய், 100 ரூபாய் என 8 லட்சத்து 35 ஆயிரத்து 500 ரூபாய் பணத்திற்கு சேதம் ஏற்படமல் இருந்தது,
அதனை உரிய முறையில் வங்கி கிளைக்கு கொண்டு சென்றனர்…
