இசை அறிஞர்கள் பற்றிய புதிய நாடகம்.
19 இசை அறிஞர்கள் பற்றிய புதிய நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது .16 மொழிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த நாடகத்தை நாடக காவலர் செம்மல் ஆர் .எஸ் மனோகரின் அடுத்த தலைமுறை குழுவினர் நடத்துகிறார்கள். எஸ். சிவ பிரசாத் , கலைமாமணி எஸ் சுருதி இயக்கி உள்ளனர்.குரோம்பேட்டை ராதா நகர் கல்ச்சுரல் அகாடமியில்அக்டோபர் 2-ம் தேதி நாடகம் அரங்கேறுகிறது
புதிய அமைப்பு உதயம்.
டாக்டர்கள் மற்றும் குடிமக்கள் இணைந்து புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது .குரோம்பேட்டை ஆனந்தா திருமண மண்டபத்தில் இன்று காலை 10:30 மணி அளவில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் டாக்டர் ராகவேலு உள்பட 20 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொள்கிறார்கள் தாம்பரம் தாம்பரத்தை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மருத்துவர் அனைவரும் பங்கேற்கிறார்கள் என்று சமூக ஆர்வலர் பி சந்தானம் தெரிவித்துள்ளார்.இது போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறை என்றும் அவர் கூறியுள்ளார்