மனிதனைப் போல நிமிர்ந்து நின்ற சிறுத்தை

தென் ஆப்பிரிக்காவில் உள்ள குருகர் தேசிய பூங்காவில் வேட்டையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுத்தை, புல் காடுகளில்… இரு கால்களிலும் நின்றபடி பார்த்தது. மனிதன் போல் நிமிர்ந்து, மேலே பார்த்தபடி அடுத்த வேட்டையை எதிர்பார்த்தது… சிறுத்தைகள் சில நேரம் மேல்நோக்கி நிமிர்ந்து நிற்கும். அது வேட்டைக்கான பார்வையை கூர்மையாக்கும் ஒரு முயற்சி. ஆனால் இவ்வளவு நேரம் நிற்காது என்பதுதான் வனவியல் ஆய்வாளர்கள் ஆச்சரியமடைகின்றனர்.

ரீல்ஸ் விபரீதம்: 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்த கார்

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டம், சதாவக்பூர் சுற்றுலாப் பகுதியில் சாஹில் ஜாதவ் (20) என்ற இளைஞர் ரீல்ஸுக்காக காரில் ஸ்டண்ட் செய்தார் கார் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது.. பலத்த காயமடைந்த சாஹில் என்பவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கனடாவில் இந்திய நடிகரின் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு.

க​ன​டா​வின் பிரிட்​டஷ் கொல்​பியா மாகாணம் சர்ரே நகரில் Kap’s Cafe என்ற உணவகம் உள்​ளது. இது பஞ்​சாபை சேர்ந்த நகைச்​சுவை நடிகர் கபில் சர்​மாவுக்கு சொந்​த​மானது என கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் இந்த உணவகத்​தில் வியாழக்கிழமை அதி​காலை 1.50 மணி​யள​வில் மர்ம நபர் ஒரு​வர் 8 முறை துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு பிறகு அங்​கிருந்து காரில் தப்பிச் சென்​றார். அதிர்​ஷ்வச​மாக இதில் எவரும் காயம் அடைய​வில்​லை. மேலும் உணவக கட்​டிடத்​தி​லும் அதிக சேதம் ஏற்​பட​வில்லை. இந்த தாக்​குதலுக்கு காலிஸ்​தான் தீவிர​வாத […]

வைகோவுக்காக மன்னிப்பு கேட்ட துரை வைகோ.

சாத்தூரில் நடந்த மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் மண்டபம் தெரிவித்து நிர்வாகிகள் வெளியேறும் போது படம் எடுத்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். இது சார்பாக வைகோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது தற்போது வைகோவின் நடவடிக்கைக்காக அவரது மகன் துரை வைகோ மன்னிப்பு கேட்டுள்ளார்

குமரியில் பெண்களை விதவிதமாக குளிக்க வைத்த மத போதகர் கைது…

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு உடல்நலக் குறைவுஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து மேக்காமண்டபம் பகுதியிலுள்ள பெந்தெகொஸ்தே சபைக்கு சென்றிருக்கிறார். அங்கிருக்கும்போதகர் உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அவருடன் உறவு கொள்வதால் தான் உனக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. தீர்க்கதரிசனம் பெற்ற என்னுடன் உறவு கொண்டால் நோய்கள் குணமாகும் எனக் கூறி, இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற போதகரைக் போலீசார் கைது செய்திருக்கின்றனர். இவர் பெண்களை விதவிதமாக குளிக்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது

ஓடு பாதையை விட்டு விலகி ஓடிய விமானம்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகா ணம் கிராஸ்கீஸ் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 15பேர் இருந்தனர். கிராஸ்கீஸ் விமான நிலையத்தில் தரை யிறங்கும்போது அந்த விமானம் ஓடு பாதையை விட்டு விலகிச் சென்றது. இதில் விமானத்தில் இருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அங் கிருந்த மீட்பு குழுவினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். இதுகுறித்து விமான போக் குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது.

விண்வெளியில் இருந்து பேசிய இந்திய வீரர்

இந்தியாவைச் சேர்ந்த ஷுபன்ஷு சுக்லாவுடன், நாசாவின் கென்னடி விண்வெளி மைய ஏவுதளத்திலிருந்து ஃபால்கன்-9 ஏவூர்தி (ராக்கெட்) விண்வெளி நோக்கி ஜூன் 25 (நேற்று) சீறிப்பாய்ந்தது. நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் குடிமகன் ஒருவர் விண்வெளிப் பயணம் மேற்கொண்டதால் அந்தப் பயணம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஷுபன்ஷு விண்வெளியில் டிராகன் விண்கலத்தில் இருந்து நேரலையில் பேசியுள்ளார். அப்போது அவர், “நமஸ்கார். (வணக்கம்) நான் இங்கே பூஜ்ஜிய புவிஈர்ப்பு விசைக்கு என்னை பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு குழந்தைபோல் நடைபயின்று […]

தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண் கைது

ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் ரயில் பாதையில் ஒரு பெண் வேகமாக கார் ஓட்டியதை அனைவரும் பார்த்தனர் ,அடிக்கடி ரயில்கள் போகும் அந்த பாதையில் இந்த பெண் கார் ஓட்டியதை பார்த்து ரயில்வே ஊழியர்கள் உடனடியாக பின் தொடர்ந்து சென்றார்கள். இதற்குள் அந்த பெண் எட்டு கிலோமீட்டர் தூரம் சென்ற பிறகு பாதையை தண்டவாளத்தை விட்டு விலகி ஒரு மரத்தின் மோதி காரை நிறுத்தினார். உடனடியாக அவரை கைது செய்தனர் .அவர் குடிபோதையில் இருந்தார் .மேலும் ரீல்ஸ் […]

கத்தார் மீது தாக்குதல் – சென்னையில் விமானங்கள் ரத்து

ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக, மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனதோகா, அபுதாபி, குவைத், துபாய் உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனதாய்லாந்து நாட்டிலிருந்து தோகா சென்று கொண்டிருந்த, 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், தோகா செல்ல முடியாமல், சென்னையில் வந்து தரை இறங்கின

இஸ்ரேலில் இருந்து 160 இந்தியர்கள் மீட்பு

இஸ்ரேலில் இருந்து சுமார் 160 இந்தியர்கள் பேருந்துகள் மூலமாக ஜோர்டான் நாட்டு எல்லைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் இஸ்ரேல், ஜோர்டானில் உள்ள இந்திய தூதரகங்கள் இணைந்து `ஆப்ரேஷன் சிந்து’ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன கார்டன் நாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் விரைவில் விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர்