அ.தி.மு.க.வுக்கு அண்ணாமலை அறிவுரை

கூட்டணி ஆட்சிதான், மாற்றுக் கருத்து இருந்தால் அமித்ஷாவிடம் பேசுங்கள் அதிமுகவுக்கு அண்ணாமலை அறிவுரை கூட்டணி ஆட்சிதான் – அண்ணாமலை திட்டவட்டம் கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை அமித்ஷா தெளிவுப்படுத்தி விட்டார்;* இதில் மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவிடம் அதிமுக பேசலாம் -அண்ணாமலை பேட்டி என் கட்சித் தலைவர் அமித்ஷா ‘கூட்டணி ஆட்சி’ என பேசிய பின்பும், நான் அதைத் தூக்கிப் பிடிக்கவில்லை என்றால் எதற்கு தொண்டனாக இருக்க வேண்டும்?

பெற்றோர்களே உஷார்!

4ஆம் வகுப்பு சிறுமியை தூக்கி சென்று சீரழித்த `காம மிருகம்’ – நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ? திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை அன்று, சாலையில் நடந்து சென்ற பத்து வயது சிறுமியை, வாயை மூடிக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிசிடிவி காட்சி, நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.

காமராஜர் பற்றிய பேச்சு -திமுக எம்பிக்கு தலைவர்கள் கண்டனம்

திமுக எம்பி திருச்சி சிவா காமராஜர் பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார் காமராஜரின் கடைசி காலத்தில் ஏசி வசதி இல்லாவிட்டால் அவர் உடம்பு தாங்காது. கொப்பளம் வந்துவிடும் என்பதால் அவர் தங்கும் அரசு விருந்தினர் மாளிகைகளில் ஏசி வசதி செய்ய கலைஞர் உத்தரவிட்டார் என்று கூறியிருந்தார்.இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி பாரதிய ஜனதாவைச் சேர்ந்த கரு. நாகராஜன் உட்பட பலர் கண்டனம் […]

13 அரசு மருத்துவ கல்லூரிகளி 488 இடங்கள் அதிகரிப்பு

13 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில், முதுநிலை பட்ட மேற்படிப்புகளில் 488 இடங்களை அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் கூடுதல் இடங்கள் நடைமுறைக்கு வரும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் இலவச மின்சாரம்

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பிஹார் மாநிலத்தில் வீடுகளில் 125 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டுக்கு மக்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவை தேர்தல் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

குழந்தைகளுக்கு ஆதார்

5 வயதுக்குள் ஆதார் பெற்ற குழந்தைகள், 7 வயதைக் கடந்த பிறகு கைரேகை மற்றும் கருவிழிப் பதிவை புதுப்பிக்க வேண்டும் பயோமெட்ரிக் விபரங்களை புதுப்பிக்கவில்லை எனில் ஆதார் செயல் இழக்கும் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

நெல்லை சாந்தி அல்வாவில் தேள்

நெல்லையில் உள்ள பிரபல சாந்தி அல்வா கடையின் அல்வாவில் தேள் இருந்ததாக வாடிக்கையாளர் புகார் தெரிவித்தார். இதன் காரணமாக கடை, குடோனில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர் தேள் இருந்தது குறித்து விளக்கம் கேட்டுகடை உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

ஒலிம்பிக் தொடரில் ஜூலை 12 முதல் கிரிக்கெட் போட்டி

2028 ஒலிம்பிக் தொடரில் ஜூலை 12 முதல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2028 ஜூலை 20 மற்றும் 29ம் தேதிகளில் பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சலில் நகரில் 2028ல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.

அமெரிக்கவின் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்தனர். உள்ளூர் நேரப்படி 12.37 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள அலஸ்காகா மாகாணம் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படக்கூடிய ரிங்க் ஆப் பயர் என்ற இடத்தில் அமைந்து இருப்பதால் அடிக்கடி இங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம். எனினும், சமீப காலமாக சக்தி […]

ஆட்சியில் பங்கு. அன்புமணிக்கு எடப்பாடி பதில்

அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் ஆட்சியில் பங்கு ஏற்போம் என்று அன்புமணி கூறியிருந்தார்.இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி “இன்னும் பந்தியிலயே உட்கார வைக்கல.. இலை ஓட்டைன்னு சொன்னா என்னங்க பண்றது?” என்று பதில் அளித்தார்