தாம்பரத்தில் கிணற்றில் தூர்வாரிய கூலி தொழிலாளி விஷவாயு தாக்கி மயக்கம்

தாம்பரம் மேற்கு பகுதி கிஷ்கிந்தா சாலையை சேர்ந்தவர் மணியன்இவர் வீட்டில் 45 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தூர்வார சங்கர்(54) என்பவர் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர், அப்போது சங்கர் தீடீரென விஷவாயு தாக்கி கிணற்றில் மயங்கி விழுந்தார், தகவல் அறிந்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து நிலைய அலுவலர் பழனியாண்டி தலைமையில் விரைந்து வந்த வீரர்கள் முதலில் விஷவாயுவை அகற்றிய பின்னர் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி சங்கரை உயிருடன் மீட்டனர், மேலும் அவரை மயக்கம் தெளியவைத்து […]

போலீஸ் அனுப்புவது போல் குறுந்தகவல் அனுப்பி வங்கி கணக்கில் பணம் பறிப்பு

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில் இவரது இருசக்கர வாகனத்தை இரு தினங்களுக்கு முன்பு அவரது மனைவியும் அவருடைய தம்பியும் எடுத்துக் கொண்டு வெளியில் சென்று வந்துள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறை அனுப்பும் குறுந்தகவல் போன்று ஒரு மெசேஜ் செந்தில் செல்போன் எண்ணிற்கு வந்துள்ளது. அந்த மெசேஜில் இருந்த லிங்கை கிளிக் செய்து என்ன அபராதம் என பார்க்க முயன்ற போது செல்போன் ஹாங் ஆகி விட்டது, அதன் பின் செந்தில் […]

ஏர் இந்தியா கை மாறுமா?

ஏர் இந்தியா விமான டிக்கெட் முன்பதிவு சர்வதேச மற்றும் உள்நாட்டு வழித்தடங்களில் சுமார் 20% குறைந்துள்ளன. கடந்த வாரம் நடந்த அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா விமான முன்பதிவு குறைந்துள்ளது.இந்த நிலையில் ஏர் இந்தியா பணத்தை அதானி நிறுவனம் வாங்க போவதாக வதந்தி பரவி வருகிறது

ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதியதால் பரபரப்பு

அகமதாபாத்தில் இருந்து ஏர் -இந்தியா விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தின் மீது பறவை மோதியது. எனினும் விமானம் புனேயில் பத்திரமாகதரையிறக்கப்பட்டது. பின்னர் நடந்த சோதனையில் விமானத்தின் மீது பறவை மோதியது உறுதி செய்யப்பட்டது. அதிர்ஷ்டவசமாக விபத்து நேராததால் பயணிகள் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தை அடுத்து புனேயில் இருந்து டெல்லி திரும்ப வேண்டிய அந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில், “புனே சென்ற […]

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கும் பணம் 3 மடங்காக அதிகரிப்பு

அரசி​யல்​வா​தி​கள், நடிகர்​கள், நடிகைகள், தொழில​திபர்​கள், கோடீஸ்​வர்​கள் என பல தரப்​பினரும் சுவிஸ் வங்​கி​களில் பெரும் பணத்தை போட்டு வைக்​கின்​றனர். சுவிஸ் தேசிய வங்கி வெளி​யிட்ட ஆண்​டறிக்​கை​யில், கடந்த ஆண்டு இந்​தி​யர்​கள் சுவிஸ் வங்​கி​களில் முதலீடு செய்த பணம் 3 மடங்கு அதி​கரித்​துள்​ள​தாக தெரி​வித்​துள்​ளது. அதாவது, கடந்த 2024-ம் ஆண்டு 3.5 பில்​லியன் பிராங்க் (சு​விஸ் கரன்​சி) அளவுக்கு இந்​தி​யர்​கள் சுவிஸ் வங்​கி​களில் முதலீடு செய்​துள்​ளனர். இது இந்​திய ரூபாய் மதிப்​பில் ரூ.37,600 கோடி​யாகும். கடந்த 2021-ம் ஆண்​டுக்​குப் […]

அறுபடை வீடு கண்காட்சிக்கு மக்கள் படையெடுப்பு

மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் (ஜூன் 22) முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில்களில் முருகனின் அறுபடை வீடுகளில் பூஜை செய்யப்பட்ட வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை, மாலையில் 2 மணி நேரம் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப் படுகிறது. மதுரையில் ஒரே இடத்தில் அமைக்கப் பட்டுள்ள அறுபடை வீடுகளை தரிசிக்க தமிழகம் முழுவதும் […]

இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க உத்தரவு.

வரும் ஜனவரி முதல் புதிய இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ABS எனப்படும் Anti-lock Braking System பொருத்த வேண்டும் தற்போது 40% வாகனங்களில் ABS பொருத்தப்படவில்லை – என ஒன்றிய சாலை போக்குவரத்து.. துறை கூறி உள்ளது

நடிகை காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு

தமிழ் தெலுங்கு உட்பட பழமொழியில் நடித்து வரும் நடிகை காஜல் அகர்வாலுக்கு 40 வயது ஆகிறது. இருந்தாலும் இன்னமும் கதாநாயகி இடத்தில் நடித்து வருகிறார். தமிழ் தவிர பழமொழி படங்களிலும் நடிக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தையும் உள்ளது. ஒரு படத்திற்கு இவர் மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இவரை சொத்து மதிப்பு 85 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது

அஜித் குமாரை யுவன் சங்கர் ராஜா சந்தித்தது ஏன்?

நடிகர் அஜித்குமார் கார் ரேஸில் பிஸியாக இருப்பதால் அக்டோபர் மாதம் வரை புதிய படங்களின் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அவரது 64வது படத்தை யார் இயக்குனர் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனாலும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அவரை இயக்குவார் என்று கூறுகிறார்கள். இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடிப்பார் என்றும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அஜித்குமாரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சந்தித்து பேசினார். இது குறித்து அவர் கூறும் போது நாங்கள் சந்தித்தது சந்தோஷமான விஷயம் […]

அதிமுக கட்சி அலுவலகம் தீப்பிடித்து எரிந்தது*

திண்டுக்கல், எரியோடு, கடைவீதி பகுதியில் அமைந்துள்ள அதிமுக பேரூர் கழக அலுவலகம் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த வேடசந்தூர் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். எரியோடு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்