பல்லாவரத்தில் கருணாநிதி நினைவு நாள்
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு நாள் பல்லாவரம் தொகுதி திமுக சார்பில் குரோம்பேட்டையில் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் திமுகவினர் மலர்துவி புகழ் அஞ்சலி செலுத்தினார்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 6 ம் ஆண்டு நினைவுநாளையொட்டி பல்லாவரம் தொகுதி திமுக சார்பாக குரோம்பேட்டையில் மலர் அளங்காரம் செய்யப்பட்ட கலைஞரின் திரு உருவப்படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் தாம்பரம் துணை மேயர் ஜி.காமராஜ், மண்டலகுழு தலைவர்கள் ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி பகுதி செயலாளர்கள் பெர்ணட், […]
பாதாள சாக்கடையில் சிக்கிய எரிவாயு லாரி பம்மலில் போக்குவரத்து பாதிப்பு
பல்லாவரம்- அனகாபுத்தூர் பிரதான சாலை பம்மலில் எரிவாயு ஏற்றிசென்ற லாரி பாதளசாக்கடை தோண்டப்பட்டு சரியாக மூடாதசாலையில் சிக்கி சாய்ததால் போக்குவரத்து பாதிப்பு, கிரேன், ஜேசிபி இயந்திரம் கொண்டு மீட்டு வருகிறார்கள். இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்லாவரம்- அனகாபுத்தூர் பிரதான சாலை உள்ளது நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை ஏற்கனவே குறுகலாகவும் வளைவு, நெளிவுகள் அதிகமான சாலை, இதற்காக விரிவாக திட்டமிட்ட அதன்பணிகளும் நடைபெறாமல் உள்ளது.இந்த நிலையில் […]
பல்லாவரம் மாணவர் விடுதியில் ஊத்தப்பம் சாப்பிட்டு ஆய்வு செய்த கலெக்டர்
உங்களை தேடி உங்க ஊரில் திட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பல்லாவரத்தில் ஒருநாள் முழுவதும் தங்கி 10 துறைகளை ஆய்வுசெய்தார். பல்லாவரம் நாகல் கேணி அரசு ஆதிதிரவிடர் மணவர்கள் விடுதியில் இரவு உணவை சாப்பிட்டு தரம் குறித்து கேட்டறிந்தார். தமிழக முதலமைச்சர் அறிவித்த உங்களை தேடி உங்க ஊரில் திட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இன்று காலை முதல் பல்லாவரம் தொகுதியில் தங்கினார். அதனையடுத்து வருவாய், சுகாதாரம், உள்ளாட்சி, சமுக நலன் மகளிர் மேம்பாடு, ஆதிதிராவிடர் […]
பல்லாவரத்தில் மறைமலை அடிகளார் பிறந்த நாள் விழா
தமிழ்வளர்ச்சி துறை சார்பில் தனித்தமிழ் இயக்க தந்தை மறைமலை அடிகளாரின் 148 வது பிறந்தநாள் விழா, அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாலை அணிவித்து மறியாதை செய்தார் தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளாரின் 148வது பிறந்தநாளை யொட்டி பல்லாவரம் மறைமலை அடிகல் தெருவில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அன்னாரின் திரு உருவ சிலைக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற […]
பொழிச்சலூர் அருகே சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்
பொழிச்சலூர் அடுத்த கவுல்பஜாரில் ஸ்ரீ ஆரோக்கிய சாய்பாப கோவில் கட்டப்பட்டு நான்குகால யாகசாலை பூஜைகளுடன் குடமுழுக்கு விமர்சையாக நடைபெற்றது. பொழிச்சலூர் அடுத்த கவுல்பஜார் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ ஆரோக்கிய சாய்பாபா கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது. 10ம் தேதி துவங்கி பிரவேசவேலி, புன்யாவகம், கோ பூஜை நடைபெற்ற நிலையில் இன்று வேதவிற்பன்னர்கள் நான்கு கால யாகசாலை பூஜைகளுடன் நடத்திய நிலையில் புனித நீரை கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதனையொட்டி கற்பகிரகத்தில் அமைக்கப்பட்ட வெள்ளை பளிங்கு […]
பல்லாவரம் மேம்பாலத்தில் மருத்துவ மாணவர்கள் கார் கவிழ்ந்து விபத்து
பல்லாவரம் – துரைப்பாக்கம் மேம்பாலத்தில் அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய மருத்துவ கல்லூரி மாணவர்கள் நல்வாய்பாக ஐந்து தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிர் தப்பினர். சென்னை பல்லாவரம்-துரைப்பாக்கம் மேம்பாலத்தின் மீது ராமச்சந்திர மருத்துவ கல்லூரியில் படிக்கும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மகாபலிபுரத்திலிருந்து சென்னை ஏர்போர்ட் நோக்கி சென்றுள்ளனர். அப்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆதர்ஸ் ரெட்டி (20) அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றுள்ளனர். அப்பொழுது பல்லாவரம் மேம்பாலத்தின் மீது வந்து கொண்டிருக்கும் போது […]
பல்லாவரம் உணவகத்தில் அடுத்தடுத்து ஷாக் : மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி
சென்னையில் தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் மூவருக்கு அடுத்தடுத்து மின்சாரம் பாய்ந்து ஷாக் அடித்த நிலையில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு. சென்னை துரைப்பாக்கம் பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் உதவியாளர் மற்றும் ஹவுஸ் கீப்பிங் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் உணவகத்தை மூடுவதற்கு முன்பு உயிரிழந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான தன்குமார், 22 […]
பல்லாவரம் அருகே லாரி மோதி ஆம்புலன்ஸ் டிரைவர் உயிரிழப்பு
பல்லாவரம் அருகே சிமெண்ட் கலவை லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலியானர், மற்றொருவர் படுகாயம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துவேல்( 25). இவர் பல்லாவரம் பகுதியில் தங்கி சென்னையில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை முத்துவேல் தனது நண்பரான தேவா (31) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திருநீர்மலை ஜி.எஸ்.டி சாலை இணைக்கும் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அதே திசையில் […]
பல்லாவரம் அட்டை கம்பெனியில் பயங்கர தீ விபத்து
பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பம்மல் நாகல்கேணியில் கார்த்திக் என்பவரது அட்டை கம்பெனியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம், சைதாப்பேட்டை, மடிப்பாக்கம், கிண்டி, அசோக் நகர் பகுதிகளில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீணிப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பில் ஆன பொருட்கள் சேதமடைந்ததுள்ளது. தகவல் அறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் […]
துக்க நிகழ்ச்சிக்கு சென்ற என்ஜினீயர் வீட்டில் 60 பவுன் கொள்ளை
துக்க நிகழ்சிக்கு சென்ற ஐ.டி பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை, 50 ஆயிரம் பணம் கொள்ளை. சென்னையை அடுத்த பழைய பல்லாவரம் பல்லாவா கார்டன் 8 வது தெருவை சேர்ந்தவர் குமரன் (44), இவர் மனைவியின் தந்தை கும்பகோணத்தில் வசித்த நிலையில் சிலநாட்களுக்கு முன்னதாக காலமானர். அந்த துக்க நிகழ்வுக்கு 30ம் தேதி வீட்டை பூட்டி சென்ற நிலையில் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி வந்தபோது கிரில் பூட்டு, கதவு உடைக்கப்பட்டு இருந்தது. […]