தேர்தல் பத்திர விவகாரத்தில் எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்தில் வழங்கிய தரவுகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியீடு

Future Gaming and Hotel services நிறுவனம் மிக அதிகமாக ரூ.1368 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளது. Mega Engineering and infrastructure limited நிறுவனம் 821 கோடி ரூபாயும், வேதாந்தா நிறுவனம் ரூ.375.65 கோடியும் வழங்கி உள்ளன. Haldia Energy Limited ரூ.377 கோடியும், Quick Supply chain private Limited ரூ.410 கோடியும் வழங்கி உள்ளன.

வாரத்துக்கு 5 நாள் பணி கோரிக்கையும் பரிசீலனை: வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத சம்பள உயர்வு

வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது. இது 2022-ம் ஆண்டு நவம்பர் முதல் அமல்படுத்தப்படுகிறது.புதுடெல்லி, சம்பள உயர்வு மற்றும் வாரத்தில் 5 நாட்கள் பணி போன்ற கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இதில் ஊதிய உயர்வு கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத சம்பள உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இது […]

எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி விதிகள் அதிரடி மாற்றம்.. முழு விபரம் இதோ !!

எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி விதிகள் மாற்றப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் இதனை தெரிந்து கொள்வது அவசியம். ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ கார்டு, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் கிரெடிட் கார்டுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீங்களும் இந்த வங்கிகளின் வாடிக்கையாளராக இருந்து அவர்களின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், இந்த விதிகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக, ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ கார்டு, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. […]

ஜனவரி 1 முதல் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை!

இந்திய வங்கிகள் சங்கத்திடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில், ஜனவரி 1 முதல் வங்கிகளில் வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அமல்படுத்த மத்திய அரசு திட்டம் இதனால் வங்கிகளின் மாத விடுமுறை 6 நாட்களில் இருந்து 8 நாட்களாக அதிகரிக்கும் என தகவல்

வங்கி வாடிக்கையாளர்க்கு

இனிமேல், வங்கி வாடிக்கையாளர்கள், 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேலான ரொக்க பணத்தை வங்கியில் செலுத்த வந்தால் அவர்களிடம், ஆதார் எண், வங்கி கணக்கு விவரம், முகவரி, செல்போன் போன் எண் போன்ற தகவல்களை, அதற்கான விண்ணப்பத்தில் பெற்ற பிறகே, ரொக்க பணம் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை, வங்கிகளுக்கு கறாராக கண்டிஷன் போட்டிருக்கிறது. பான் நம்பர் இல்லாதவர்களிடம், சுய விவர விண்ணப்பம் பெற்ற பிறகே, பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள அவர்களை அனுமதிக்க வேண்டும் என்ற […]

இந்தியாவில் கடந்த நிதியாண்டில் நடந்த டிஜிட்டல் பரிமாற்றம், இந்தியாவின் ஜிடிபியில் 50 சதவீதம் என உலக வங்கி கூறியுள்ளது

ஜி20 கொள்கை குறித்த ஆவணத்தை உலக வங்கி தயாரித்துள்ளது. அதில் இந்தியா குறித்து கூறப்பட்டுள்ளதாவது: பின்தங்கிய மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிதிச் சேவைகள் அணுகுவதை உறுதி செய்யப்படுவது என்பது, ஜன்தன் வங்கிக்கணக்கு, ஆதார் மற்றும் மொபைல் போன்கள் இல்லாமல் போயிருந்தால் 47 ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆனால், இந்தியா இதனை 6 ஆண்டுகளில் செய்து சாதனை நிகழ்த்தி உள்ளது. பிரதமரின் ஜன்தன் யோஜனா வங்கிக்கணக்கு திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது, போது, 2015 மார்ச்சில்14.72 கோடி வங்கிக்கணக்குகள் […]

நாமக்கல் | முதியவரை ஏளனமாக பேசிய வங்கி – ரூ. 34,500 இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

நாமக்கல்: 2018-2023 வரையில், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத காரணத்தால் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ. 35,000 கோடி அபராதம் வசூலித்ததாக சமீபத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இதுபோன்ற வழக்கில், வங்கி வாடிக்கையாளருக்கு ரூ. 34,500 இழப்பீடு வழங்க, நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளிள்ளது. கோவை, வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், இவரது மனைவி யசோதா (62). இவர் சாய்பாபா காலனியில் உள்ள ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். கடந்த 2017 மே மாதத்தில் […]

வங்கி ஊழியர் கடன் தொல்லையால் தற்கொலை

சேலம் ஓமலூர் பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவர், பொதுத்துறை வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் குடும்ப தேவைக்காக சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால், கடன் கொடுத்தவர்கள் வங்கிக்கு வந்து கேட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.