காணிக்கை உண்டியலில் போடும் சுற்றறிக்கை வாபஸ்
கோயிலில் அர்ச்சகர் தட்டில் விழும் காணிக்கையை உண்டியலில் போடும் உத்தரவு வாபஸ் மதுரையில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 7ம் தேதி செயல் அலுவலர் பிறப்பித்த உத்தரவு திரும்பப்பெறப்பட்டது கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் உத்தரவை வாபஸ் பெற்றது கோவில் நிர்வாகம் கோயில் தக்காரிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்ததால் மதுரை மண்டல இணை ஆணையர் நடவடிக்கை
திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்வதை தடுக்க கூடாது – நீதிமன்றம்
மதுரை மாவட்டத்தில் கடைசி நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 144 தடை உத்தரவை பயன்படுத்தி பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்வதை தடுக்க கூடாது. அவர்கள் வழிபாட்டு உரிமையை பறிக்க கூடாது. மேலும் 144 தடை உத்தரவை நீக்க கோரியும் மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை கி ளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயசந்திரன், பூர்னிமா அமர்வு முன் முறையீடு செய்யப்பட்டது. இன்று கடைசி வழக்காக விசாரிக்க நீதிபதிகள் […]
ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தில் ஏக தின லச்சார்ச்சனை விழா
குரோம்பேட்டை பத்மநாப நகர் ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் தை மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு லலிதா சகஸ்ரநாம குழுவினரனால் ஏக தின லச்சார்ச்சனை விமர்சையாக நடைபெற்றது காலையில் கருமாரி அம்மனுக்கு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு ஏக தின லட்சார்ச்சனை நடைபெற்று சிறப்பு தீபாரனை செய்யப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர் விழாவுக்கான ஏற்பாடுகளை லலிதா சகஸ்ர நாம குழுவினர் மற்றும் கருமாரியம்மன்ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் […]
பத்மநாப நகர் கருமாரியம்மன் ஆலயத்தில் ஐயப்ப சுவாமி 51 ஆம் ஆண்டு மலர் பூஜை
குரோம்பேட்டை பத்மநாபன் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு 51 ஆம் ஆண்டு மலர் பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. காலையில் மகா கணபதி ஹோமம், 51 வகை சிறப்பு அபிஷேகம்,சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்று மதியம் ஒரு மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. அன்னதான உபயதாரர் சங்கர் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர்கள் நித்யா சங்கரநாராயணன் மற்றும் சங்கரநாராயணன் தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அன்னதானத்தை வழங்கினர். […]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (அக். 4) தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று (அக். 2) கோயிலில் கொடிக்கம்பத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடியை ஏற்றுவதற்கான புனித தர்ப்பை மற்றும் புனித கொடியேற்றும் கயிறு போன்றவற்றை தேவஸ்தான ஊழியர்கள் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று கோயில் அர்ச்சகர்களிடம் ஒப்படைத்தனர். இவை பாதுகாப்பாக ரங்கநாயக மண்டபத்தில் பெரியசேஷ வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ விழாவை யொட்டி, திருப்பதி […]
உலகப்புகழ் பெற்ற குலசை தசரா் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்படவுள்ளநிலையில், காப்பு கட்டி மாலை அணிந்து பக்தர்கள் விரதம் மேற்கொள்கின்றனர்.

இன்று வியாழக்கிழமை காலை சிறப்பு அலங்காரத்தில் சிவப்பு நிற பட்டு உடுத்தி மங்களகரமாக அழகிய திருமுகத்துடன் ஆனந்த தரிசனம் தருகிறாள் என் அன்னை மேச்சேரிஶ்ரீபத்ரகாளிஅம்மன்

காலையில் விழிக்கும் போது முதலில் எதைப் பார்த்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

நாம் காலை எழுந்தவுடன் உங்கள் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். அல்லது செல்வமகளான மகாலட்சுமியின் புகைப்படத்தை பார்த்தால் அன்றைய நாள் மிகவும் அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். குறிப்பாக அந்த நாள் மங்களகரமான நாளாக இருக்குமாம்.காலை கண் விழித்ததும் முதன் முதலில் சூரியனை தரிசிப்பது மிகவும் நல்ல விஷயம் ஆகும்.மேலும் தாமரை பூ, சந்தனம், கடல், மலர்கள், அழகான இயற்கை காட்சிகளை பார்ப்பதன் மூலம் அன்றைய நாள் மிகவும் சிறப்பான நல்லாக இருக்கும். குறிப்பாக அன்றைய நாள் முழுவதும் […]
நவராத்திரி கொலு வைப்பது எப்படி:

நவராத்திரி உணவு வகைகள்:

முதல் நாள்: வெண் பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை போன்ற உணவுகளை படைப்பார்கள்.இரண்டாம் நாள்: புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம் போன்ற உணவுகளை படைப்பார்கள்.மூன்றாம் நாள்: கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல்.நான்காம் நாள்: தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்து வடை, பட்டாணி சுண்டல் போன்ற உணவுகளை படைத்து […]