மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 82,000 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 200 புள்ளிகள் குறைந்து 74,302 ஆக வர்த்தகம்;
தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 27 புள்ளிகள் குறைந்து 22,677 ஆகவும் வர்த்தகம்
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 7 புள்ளிகள் அதிகரித்து 65,223 ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 12 புள்ளிகள் அதிகரித்து 19,405 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
சரிவுடன் தொடங்கியது இன்றைய பங்குச்சந்தை
வாரத்தின் முதல் நாளான இன்று (ஆகஸ்ட் 14) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது. அதன்படி, இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 169.63 புள்ளிகள் சரிந்து 65,153.00 புள்ளிகள் ஆக வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 44.30 புள்ளிகள் சரிந்து 19,384.00 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆகிறது.
பங்குச்சந்தையில் இன்று லாபம் தரும் பங்குகள்
இந்திய பங்குச்சந்தையில் இன்று (ஆக.14) லாபம் தரும் பங்குகளை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். Tata Steel: இலக்கு ரூ.126 நிறுத்த இழப்பு ரூ.117. Tata Motors: இலக்கு ரூ.625, நிறுத்த இழப்பு ரூ.602. Balkrishna Industries: இலக்கு ரூ.2,400, நிறுத்த இழப்பு ரூ.2,320. IRCTC: இலக்கு ரூ.700, நிறுத்த இழப்பு ரூ.645. Power Grid Corporation: இலக்கு ரூ.256, நிறுத்த இழப்பு ரூ.238.
இன்றைய கிரிப்டோகரன்சி நிலவரம்
சர்வதேச கிரிப்டோ சந்தை கடந்த 24 மணி நேரத்தில் 0.61% குறைந்து 1.17 ட்ரில்லியன் டாலராக உள்ளது. பிட்காயின் ரூ.24,30,430 ஆகத் தொடங்கி 0.75% குறைந்துள்ளது. எதெர் ரூ.1,52,613 ஆகத் தொடங்கி 0.54% ஆக குறைந்திருக்கிறது. டோஜ்காயின் ரூ.6.24 ஆகத் தொடங்கி 0.64% ஆக குறைந்துள்ளது. பினான்ஸ் நாணயம் ரூ.19,882 ஆகத் தொடங்கி 1.39% ஆக குறைந்துள்ளது.
உயர்வில் தொடங்கிய பங்குச்சந்தை
இந்தியப் பங்குச்சந்தை இன்று (ஆக.11) உயர்வுடன் தொடங்கியது. வர்த்தக நேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 39.31 புள்ளிகள் உயர்ந்து 65,727.50 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 11.20 புள்ளிகள் உயர்ந்து 19,554.30 ஆகவும் தொடங்கி உள்ளன. இன்று பெரும்பான்மையான பங்குகள் உயர்வில் தொடங்கின.
இன்று இந்த 5 பங்குகளில் முதலீடு செய்யுங்கள்
பங்குச்சந்தையில் இன்று லாபம் தரும் பங்குகளை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். சொனாட்டா சாப்ட்வெர்: இலக்கு ரூ.1094, நிறுத்த இழப்பு ரூ.1051; கோரமண்டல் இன்டர்நேஷனல்: இலக்கு ரூ.1094, நிறுத்த இழப்பு ரூ.1060; எம்&எம் பைனான்ஸ்: இலக்கு ரூ.296, நிறுத்த இழப்பு ரூ.280; டாடா மோட்டார்ஸ்: இலக்கு ரூ.635, நிறுத்த இழப்பு ரூ.605; டிவிஎஸ் மோட்டார்: இலக்கு ரூ.1392, நிறுத்த இழப்பு ரூ.1325.
அதிக லாபம் கொடுக்கும் பங்குகள்: ஷீத்தல் மல்பானி
பிரபல முதலீட்டு நிறுவனமான தமோஹாராவின் தலைமை அதிகாரி ஷீத்தல் மல்பானி, லார்ஜ் கேப் ஃபண்டுகளைவிட, மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகளே அதிக லாபம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், “கடந்த காலாண்டில், நிதி, நுகர்வோர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளை சேர்ந்த சில நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கே அதிக லாபம் கிடைத்திருக்கிறது” என கூறியுள்ளார்.
சிப்லா நிறுவன பங்குகள் ஏலம்
இந்தியாவின் 3வது பெரிய மருந்து நிறுவனமான சிப்லாவின் பங்குகளை ஏலம் எடுக்க பிளாக்ஸ்டோன் நிதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம், சிப்லாவை நிறுவிய ஹமீட் குழுமத்தின் ஒட்டுமொத்த 33.41% பங்குகளும் அவர்களின் கையை விட்டு போகும். இந்நிறுவனத்தை உருவாக்கிய குவாஜா அப்துல் ஹமீத், காந்தி, நேரு, சர்தார் படேல் உள்ளிட்ட தலைவர்களோடு மிக நெருக்கமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.