சென்னை கத்தீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
சென்னையில் நடந்த விமானப்படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியைக் காணவந்து உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, அடையாறு, சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர […]
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, அடையாறு, சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திரைப் பயணம் மற்றும் வாழ்க்கை வரலாற்றை பற்றி விளக்கிடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டார். உடன் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு மருத்துவம் […]
‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாளை ஒட்டி
சென்னையில் உள்ள மணிமண்டபத்தில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பதவி பறிக்கப்பட்ட அமைச்சர்கள்: பின்னணியில் நடந்தது என்ன?
அமைச்சரவை மாற்றம் குறித்து, சமீபத்தில் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களிடம், ‘மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது’ என, முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். ஆனால், அமைச்சரவை மாற்றம் பலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள நிலையில், மாற்றத்தின் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக அமைச்சரவையில் இருந்து, மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். புதிய அமைச்சர்களாக செந்தில்பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மூத்த அமைச்சர்கள் சிலரின் துறைகள் மாற்றப்பட்டுஉள்ளன. இதன் […]
ஆளுநர் மாளிகையில்
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அமைச்சரவை, குழு புகைப்படம் எடுத்துக்கொண்டது.
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களிடம் ஆளுநர் மாளிகையில்நடைபெற்ற பதவியேற்பு விழாவில்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். உடன் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் ஆளுநர் மாளிகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்
முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், வி. செந்தில் பாலாஜி அவர்களுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். உடன் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையையொட்டி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்,மாண்புமிகு மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை […]