நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.சு.சிவராசு, இ.ஆ.ப., அவர்கள் தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் பகுதியில் அமைந்துள்ள MIT கல்லூரி வளாகத்தில் தூய்மையின் சேவைக்கான (Swachatta Hi Seva)விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு.சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.கருணாநிதி, மாநகராட்சிதுணை மேயர் திரு.கோ.காமராஜ், மண்டலக்குழு தலைவர்கள் திரு.வே.கருணாநிதி, திரு.ஜோசப் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சிட்லபாக்கம் சிவி ராமன் தெருவில் ராயல் ஜாஸ்மின் குடியிருப்பில் வசிக்கும் சிறுவன் முத்துகிருஷ்ணன்

சுதந்திர தினத்தன்று மகாத்மா காந்தி வேடத்தில் தோன்றியதை பார்த்து அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

சிட்லபாக்கத்தில் தீ விபத்தை தடுக்க உதவிய கவுன்சிலர்

சிட்லபாக்கம் 43-வது வார்டு இருக்கும் பாலு அவன்யூ பகுதியில் ஆனந்தம் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு மூன்றாவது மாடியில் அக்பர் ஷா என்பவர் வாடகைக்கு குடியிருக்கிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு ஹைதராபாத் சென்று விட்டார். கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி காலையில் கட்டில் மெத்தைக்கு அருகில் உள்ள ஸ்விட்ச் பாக்சில் மின்கசிவு ஏற்பட்டு மத்தியில் தீப்பிடிக்க தொடங்கியது .வீட்டின் ஜன்னல் கதவு பூட்டப்பட்ட நிலையில் புகை வெளியே வந்தது. இதை பார்த்தவர்கள் மாமன்ற உறுப்பினர் […]

சிட்லபாக்கத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3ல் தி.மு.க அரசின் நிர்வாகத்தை கண்டித்து சிட்லபாக்கம், -செம்பாக்கம் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிட்லபாக்கம் வரதராஜா திரையரங்கம் அருகில் நடந்த போராட்டத்தில் மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்துகொண்டனர். இந்த ஆர்பாட்டதில் அதிமுக சிட்லபாக்கம்-, செம்பாக்கம் பகுதி செயலாளர் மோகன், அதிமுக எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, மாவட்டக் துணைச் செயலாளர் ப.தன்சிங், மாமன்ற உறுப்பினர்கள் சுபாஷினி புருஷோத்தமன், […]

சிட்லபாக்கம் 43வது வார்டு உட்பட்ட தெருக்களில் பல இடங்களில் மரங்கள் மின்கம்பங்களை உரசிக் கொண்டு இருக்கின்றன

மழை காலத்திற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார துறை பணியாளர்களின் உதவியோடு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தும் பணியின் போது எடுத்த படம்.

டென்மார்க் நாட்டில் தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் சிட்லபாக்கம் சி.ஜெகன் குப்பைகள் தரம் பிரிப்பது பற்றி நேரில் பார்வையிட்டார்

தாம்பரம் மாநகராட்சியில் தற்போது வீடு வீடாக குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து அதனை ஒழுங்கு படுத்துகிறார்கள். திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், அதிக குப்பை சேரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பைகளை அள்ளுவதற்கு தனியார் நிறுவனங்களை தாம்பரம் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிறுவனங்கள் ஒரு வீட்டுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை வசூலித்து குப்பைகளை தரம் பிரித்து அள்ளிச் செல்கிறார்கள். இந்த நிலையில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகளில் டென்மார்க் நாட்டில் உள்ள கென்டாப்ட் […]

சிட்லபாக்கத்தில் கோடைகால சிறப்பு முகாம்

சிட்லபாக்கத்தில் கோடைகால சிறப்பு முகாம் தொடக்க விழா நடைபெற்றது.சிட்லபாக்கம் 2வது பிரதான சாலைக்கு அருகே அமைந்துள்ள ஏரி நிலப்பரப்பில் விளையாட்டு பயிற்சியாளர் சுரேஷ் தலைமையில் “அடையா படையா” எனும் விளையாட்டுப் போட்டிக்கான இலவச கோடைகால சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் முகமை தொடங்கி வைத்தார். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரையாற்றி பால், முட்டை மற்றும் பழம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில-மாவட்ட அடையா படையா நிர்வாகிகள், ஆதரவாளர் உமாபதி & சன்ஸ் நிறுவன […]

சிட்லபாக்கம் திமுகவுன்சிலர் பிறந்தநாள் விழா

தாம்பரம் மாநகராட்சி 43 வது வார்டு திமுக கவுன்சிலரும், உமாபதி அன் சன்ஸ் நிறுவன தலைவருமான லயன்.சி.ஜெகன் பிறந்தநாள் கிழக்கு தாம்பரம் பாரதமாதா தெருவில் உள்ள அரங்கில் வெகு விமரிசையாக கொண்டாட்டப்பட்டது. இதில் தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், திமுக நிர்வாகிகள், நலச்சங்கத்தினர், நண்பர்கள், உமாபதி அன் சன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என பல்வேறு தரப்பினர்கள் கலந்துக்கொண்டனர். அப்போது பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. அனைவரும் சி.ஜெகனுக்கு சால்வை அணிவித்தும், மலர் […]

சிட்லபாக்கம் புரோகிதர் வீட்டில் லாக்கருடன் 27 பவுன் கொள்ளை கால்டாக்சி டிரைவர் கைது

தாம்பரம் அருகே புரோகிதர் வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயன்று முடியாததால் 27 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் லாக்கருடன் திருடி சென்ற சம்பவம் கொலை வழக்கு குற்றவாளி மற்றும் கால் டாக்சி ஓட்டுனர் இருவரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். சென்னை சிடலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் புரோகிதர் ரங்கராஜன் கடந்த ஐந்தாம் தேதி தனது குடும்பத்திபருடன் மயிலாப்பூரில் உள்ள தனது உறவினர் நிகழ்ச்சியில் கலந்துவிட்டு மூன்று […]

சிட்லபாக்கம் 43வது வார்டில் உள்ள சரஸ்வதி நகர் பாபு தெரு பூங்காவில் புதியதாக விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படுகின்றன

அவற்றின் தரத்தை மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் ஆய்வு செய்தார். தொடர்ந்து சிறுவர் உபகரணங்களை பதிக்கும் பணி தொடங்கிய போது எடுத்த படம்