2 வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற 95 ரன்கள் இலக்கு
வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இந்திய அணிக்கு 95 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2ஆவது இன்னிங்சில் வங்கதேசம் 146 ரன்களில் ஆல் அவுட் ஆனது; வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷத்மன் இஸ்லாம் 50, முஷ்பிகுர் 37 ரன்கள் சேர்த்தனர்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் மாற்றம்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்ற பின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா (71.67 சதவீதம்) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) 2ம் இடத்திலும் தொடர்கின்றன. நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்ற இலங்கை (50.00 சதவீதம்) ஒரு இடம் உயர்ந்து 3வது இடத்திற்கு வந்துள்ளது. தோல்வியை சந்தித்த நியூசிலாந்து (42.86 சதவீதம்) 4வது இடத்திற்கு சென்றுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் – பெண்கள் பிரிவிலும் இந்திய அணி தங்கம்
ஹங்கேரியில் நடைபெறும் 45ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய பெண்கள் அணியும் தங்கம் வென்று அசத்தல். அஜெர்பைஜான் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் திவ்யா தேஷ்முக், ஹரிகா, வந்திகா அக்ரவால் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணியின் தங்கம் உறுதியானது. ஓபன், பெண்கள் என இரண்டு பிரிவிலும் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை.
ஒரே ஆண்டில் 139 சிக்ஸ் – நிக்கோலஸ் பூரன் புதிய சாதனை
நிக்கோலஸ் பூரன் 139 சிக்சர்கள் அடித்து ஒரே ஆண்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்
2-வது ஒருநாள் போட்டி: வாண்டர்சே அபார பந்துவீச்சு… இந்தியாவை வீழ்த்தி இலங்கை வெற்றி
கொழும்பு, இந்தியா -இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் இன்று போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் மற்றும் அவிஷ்கா தலா 40 ரன்கள் அடித்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், குல்தீப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 241 ரன்கள் அடித்தால் […]
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி புகழாரம் சூட்டியுள்ளார்
விராட் கோலிக்கும் தனக்கும் இடையிலான நட்பு குறித்து நிகழ்ச்சி ஒன்றில் தோனி மனம் திறந்தார். கோலியுடன் இணைந்து விளையாடியபோது அதிகமாக 2 மற்றும் 3 ரன்களை தாங்கள் எடுப்போம் என்றும் கோலியுடன் இணைந்து ஆடுவது ஜாலியாக இருக்கும் என்றும் தோனி கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா- தென் ஆப்ரிக்கா மோதல்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காமல் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம். கடந்தாண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை நூலிழையில் தவறவிட்ட இந்தியா சாம்பியன் ஆகுமா என எதிர்பார்ப்பு. டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.20கோடி, 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 கோடி பரிசாக கிடைக்கும்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான மகளிர் டெஸ்ட் போட்டியை பார்க்க அனுமதி இலவசம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு
இதேபோல், ஜூலை 5, 7, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் டி20 போட்டிகளுக்கான டிக்கெட்-ஐ, ஜூன் 29ம் தேதி PAYTM insider இணையத்தில் பெறலாம் எனவும் அறிவிப்பு. இந்த டிக்கெட் விலை ₹150 என நிர்ணயம்.
டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியா – வஙகதேசம் இன்று பலப்பரீட்சை!..
இரவு 8 மணிக்கு ஆண்டிகுவா மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது
டி20 உலகக்கோப்பை தொடரில், சூப்பர் 8 சுற்று போட்டிகள் இன்று முதல் தொடக்கம்
முதல் போட்டியில் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை