திண்டுக்கல்லில் போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற வாலிபருக்கு துப்பாக்கி சூடு
திண்டுக்கல்லில் வாலிபர் இர்பான் கொலை வழக்கில் தொடர்புடைய ரிச்சர்ட் சச்சின் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற போது தனிப்படை போலீசார் முழங்காலில் சுட்டு பிடித்தனர். படுகாயம் அடைந்த வாலிபர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ரவுடி தாக்கியதில் காவலர் அருண் என்பவர் படுகாயம்
போலீசை குழப்ப வண்டி நம்பரை மாற்றிய பலே கொள்ளையன்
போலீசை குழப்ப ஒ.எல்.எஸ் ஆப்பில் விற்பனைக்கு பதியும் எண்களை தனது பல்சருக்கு பயன்படுத்திய செயின் பறிப்பில் ஈடுபடும் பலே கொள்ளையன் சென்னை-வேலூர்- சென்னை என 350 கி.மீ தூரம் 2ஆயிரம் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொளையனை பிடித்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி 30 ஆண்டுகளாக 35 வழக்குகளில் சிக்கி இரண்டு பெயரில் வலம் வந்தது விசாரணையில் தெரிய வந்தது. சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலம் சர்வீஸ் சாலையில் 17ம் தேதி நடைப்பயிற்சி சென்ற சாந்தகுமாரி(59) கழுத்திலிந்து […]
பஸ் படிக்கட்டில் இருந்து விழுந்து நடத்துநர் உயிரிழப்பு
தாம்பரம் அருகே அரசு பயணிகளை இறக்கிவிட்ட பேருந்தின் படிகட்டில் நின்ற நடத்துனர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (52) போளூர் இருந்து தாம்பரம் வரை செல்லும் தடம் எண் 148 அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்தார், இன்று காலை வழக்கம் போல் பணியில் இருந்த போது தாம்பரம் அருகே வந்த பேரூந்தில் பயணிகளை இறக்கிவிட நடத்துனர் சீனிவாசன் பேருந்து படிகட்டில் நின்றதாக கூறப்படுகிறது, அப்போது திடீரென நிலைதடுமாறிய […]
கோவை ஈஷா யோகா மையத்தில் போலீசார் விசாரணை..
சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி கோவை ஈஷா யோகா மையத்தில் போலீசார் விசாரணை. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஈஷா யோகா மையத்திற்குள் நுழைந்த விசாரணை குழு.
போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் வடமாநில கொள்ளையன் பலி
குமாரபாளையம் அருகே கண்டெய்னரில் பதுங்கிய வடமாநில கொள்ளையர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னரை போலீஸ் மடக்கியபோது, 6 கொள்ளையர்கள் தாக்க முயன்றுள்ளனர். தற்காப்புக்கு போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார். கண்டெய்னரில் இருந்தது, கேரள கொள்ளை பணம் எனத் தெரிய வந்துள்ளது
மலேசிய மோசடி கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது
மலேசிய மோசடி கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து சிம் கார்டு வாங்கி சென்று மோசடியில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த சாம் மேன் தாங் கைது செய்யப்பட்டார்.
தாழம்பூர் அருகே பள்ளி மாணவி கற்பழிப்பு 3 பேர் கைது
தாழம்பூர் அருகே 11 வகுப்பு பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலத்காரம், 2 சிறார் உள்ளிட்ட 3 பேர் கைது தாழம்பூர் அடுத்த மேலக்கோட்டையூரில் திருச்சியை சேர்ந்த குடும்பம் 4 ஆண்டுகளாக வசித்து வந்தது. அந்த குடும்பத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி அருகில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18ம் தேதி மாலை பள்ளி முடித்து வீடு சென்ற நிலையில் இயற்கை உபாதை கழிக்க திறந்தவெளி […]
நீலாங்கரையில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக் கொலை
சீசிங் ராஜா என்கவுன்டர் … பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 29வது நபராக, ஆந்திராவில் பதுங்கி இருந்த ரவுடி சீசிங் ராஜா நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று போலீசாரால் என்கவுண்டர் செய்ய பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது …. கைது செய்யப்பட்ட சீசிங்கு ராஜா ஆந்திராவிலிருந்து சென்னைக்கு அழைத்து வரும்போது போலீசாரை தாக்கி விட்டு தப்ப செல்ல முயன்றதாக கூறபடுகிறது. இந்நிலையில் ரவுடி சீசிங்கு […]
சீசிங் ராஜாவின் உடலை பார்த்து கதறி அழுத மகள்
சென்னையில் இன்று அதிகாலையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி சீசிங் ராஜா ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உடலை பார்த்து கதறி அழுத மகள் “செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டீர்களே” என கதறி அழுத மகள் ராயப்பேட்டை பிணவறை வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர்
▪️. போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சி செய்ததால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தகவல். தலைமறைவாக இருந்த அவர் கடப்பாவில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.. என்கவுன்ட்டர் செய்யப்பட்ட அவர் மீது 5 கொலை உட்பட 33 வழக்குகள் நிலுவையில் உள்ளன..