மே 6ம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியாகும்
தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி வரும் 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தகவல். தேர்வு முடிவுகளை அமைச்சர் வெளியிடுவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக விளக்கம்
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – சமூக அமைப்புகளின் கருத்துக்களை கேட்காமல் அரசே தன்னிச்சையாக முடிவெடுப்பது சட்டவிரோதமாகும்.
கள்ளர் சமுதாயத்தினர் கல்வியறிவு பெறவும், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் உயர்நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்ட கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பது தொடர்பாக அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2023-24 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், இடம்பெற்றிருந்த கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அதற்கான நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கள்ளர் […]
40,000 மாணவர்கள் ‘ஆப்சென்ட்’ : வீடுதேடி சென்று வீடு தேடிச் சென்று பேசி, துணை தேர்வில் பங்கேற்க வைக்க ஆசிரியர்களுக்கு அறிவுரை
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகளில், ‘ஆப்சென்ட்’ ஆன, 40,000 மாணவர்களை, வீடு தேடிச் சென்று பேசி, துணை தேர்வில் பங்கேற்க வைக்க வைக்கும்படி, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுக்கான, விடைத்தாள் மதிப்பீடு நடந்து முடிந்துள்ளது. வரும், 6ம் தேதி பிளஸ் 2வுக்கும், 10ம் தேதி – 10ம் வகுப்புக்கும், 14ம் தேதி – பிளஸ் 1க்கும் தேர்வு முடிவுகள் […]
மிக்ஜாம் புயல் மழை பாதிப்பால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு .
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை பொறுத்தவரை மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், […]
காஞ்சிபுரம் மாவட்ட வெள்ளமிீட்பு பணிக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர் முத்துசாமியை டிரக்டரில் அமரவைத்து வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட வண்டலூர்-மிஞ்சூர் வெளிவட்ட சாலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை ஓட்டி சென்றார்.
மாணவர்களை ஈடுபடுத்துவதே ‘நிகர பூஜ்ஜிய உமிழ்வு நாடு’ என்பதை அடைவதற்கான சிறந்த வழி, முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே உள்ள SRM இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கிரீன் டெர்ரே அறக்கட்டளையுடன் இணைந்து கார்பன் நடுநிலைமைக்கான நடவடிக்கைகளுக்கான வரைபடத்தை வரைவதற்காக U75: Net Zero University Campus Regional Workshop ஐ நடத்தியது. கார்பன்-நியூட்ரல் வளாகங்களை உருவாக்க தேவையான அறிவு மற்றும் கருவிகளுடன் உயர் கல்வி நிறுவனங்களை சித்தப்படுத்துவதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை […]
எஸ்ஆர்எம் பல்கலை சார்பில் ஆருஷ் 23-தேசிய அளவிலான 4 நாள் தொழில்நுட்ப திருவிழா-90,000 மாணவர்கள் பங்கேற்பு
நிறைவு விழாவில் நாட்டின் முன்னணி உணவு விஞ்ஞானி கே. ராஜகோபால் ‘பிரதிபலித்தல்’ என்ற ஆண்டு இதழை வெளியிட்டார் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம்(SRMIST) சார்பில் 4 நாட்கள் நடைபெற்ற, தேசிய அளவிலான கலை மற்றும் தொழில்நுட்ப திருவிழாவில் பங்கேற்ற மாணவ மாணவியர் தங்களின் அறிவுசார் தொழில்நுட்ப திறமைகளை வெளிப்படுத்தி புதுமை மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டனர். சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டன. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் எனப்படும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம்(SRMIST SRM Insititute of […]
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
செப்டம்பர் 14ஆம் தேதி வரை மாணவர்கள் கல்லூரிகளில் சேரலாம் விருப்பம் உள்ள மாணவர்கள் http://tngasa.in மற்றும் http://tngasa.org என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
என்ஜினீயரிங் படிப்பில் சுமார் 60 ஆயிரம் இடங்கள் காலி
சிறப்பு, பொது கலந்தாய்வு தமிழ்நாட்டில் 442 கல்லூரிகளில் உள்ள பல்வேறு என்ஜினீயரிங் படிப்புகளில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 780 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இந்த கலந்தாய்வு மூலம் 775 இடங்கள் நிரப்பப்பட்டு இருந்தன. அதனைத்தொடர்ந்து பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவு ஆகியவற்றுக்கான கலந்தாய்வு தொடங்கி, கடந்த 3-ந் தேதியுடன் நிறைவு […]
காலாண்டுத் தேர்வில் பொது வினாத்தாள் முறை: வழிகாட்டுதல்கள் வெளியீடு
பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, பொது வினாத்தாள் முறையில் காலாண்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் நிலை குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆய்வு மேற்கொண்டது. அப்போது, மாவட்ட அளவில் தயாரிக்கப்படும் காலாண்டுத் தேர்வு வினாத் தாள்களில், பாட நூல்களில்உள்ள வினாக்கள் மட்டுமே கேட்கப்படுகின்றன. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவது தெரியவந்தது. இதற்குத் தீர்வுகாணும் வகையில் காலாண்டு, அரையாண்டுத் […]