சொந்த முயற்சியால் வெற்றி பெறுவேன் – அஜித் குமார்.

நடிகர் அஜித்குமார் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அளித்த பேட்டியில்,எனது சொந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். படப்பிடிப்பில் காயம் ஏற்படுவதை போலத்தான், ரேஸிங்கிலும், ஆனால் மிகவும் கவனமாக இருக்கிறேன், விரைவாக கற்றுக்கொள்கிறேன். நான் முதலில் நடிக்க வரும்போது எனக்கு தமிழ் தெரியாது, அதற்காக நிறைய பயிற்சி எடுத்தேன். விரைவாக கற்றுக் கொண்டேன் எனது கடைசி காலத்தில் திரும்பிப் பார்க்கும்போது, நான் ஏதோ முயற்சித்திருக்கிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி. பைக் ரேஸில் நான் முடிந்தவரை தொடர […]

திரையுலகில் களமிறங்கும் நடிகை ஊர்வசி மகள்!

சுந்தரியவள் ஸ்டெல்லா’ என்கிற மலையாளதிரைப்படத்தின் வாயிலாக நடிகை ஊர்வசியின் மகள் தேஜலட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.ஏற்கனவே நடிகை வனிதா என் மகள் சினிமா நடிக்கிறார் இப்போது அடுத்த வாரிசு வந்துள்ளது

கைவிடப்பட்ட சிம்பு படம்

நடிகர் சிம்பு கமல்ஹாசன் உடன் தக்லைப் படத்தில் சிறப்பாக நடித்து இருந்தார். தொடர்ந்து அவர் சந்தானத்துடன் இணைந்து நடிப்பதாக கூறப்பட்டது. சிம்புவின் நட்பு காரணமாக சந்தானமும் நகைச்சுவை வேடத்தில் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் இப்போது அந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. காரணம் இந்த படத்தை தயாரித்த ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கப் பிரிவு வளையத்தில் இருக்கிறார். இதனால் படம் கைவிடப்பட்டுள்ளது

அப்துல் கலாம் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்

விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘KALAM: The Missile Man of India’ என பெயரிடப்பட்டுள்ளது. ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘ஆதிபுருஷ்’ படத்தை இயக்கிய ஓம் ராவத் இப்படத்தை இயக்க உள்ளார். பான் இந்தியா படமாக உருவாக உள்ள இந்த படத்தின் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 29ம் தேதி நடிகர் விஷால் – சாய் தன்ஷிகா திருமணம்!

நானும் விஷாலும் ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போகிறோம்” என்று —யோகி டா’ பட மேடையில் நடிகை சாய் தன்ஷிகா அறிவித்தார்.அப்போது விஷால் உடன் இருந்தார். .

வேலூரில் விஜய் கட்சியில் பூத் கமிட்டி மாநாடு

நடிகர் விஜய் தனது கட்சியின் முதல் பூத் கமிட்டி மாநாட்டை கோவையில் வெற்றிகரமாக நடத்தினார். தற்போது அடுத்த மாநாட்டை வேலூரில் நடக்க திட்டமிட்டுள்ளார். இதில் தமிழகத்தின் வட மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்க இருக்கிறார்கள் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் தேதி அறிவிக்கப்படும்.

சிரஞ்சீவி படத்தில் நயன்தாரா நடிப்பது உறுதி

நடிகர் சிரஞ்சீவி படத்தில் நடிக்க நயன்தாரா ரூபாய் 18 கோடி கேட்டதாக கூறப்பட்டது சம்பள பிரச்சனை காரணமாக நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது இந்த நிலையில் சிரஞ்சீவி படத்தின் படக்குழு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது அதில் நயன்தாரா இடம் பெற்றுள்ளார் இதனால் சம்பள பிரச்சனை தீர்ந்ததாக தெரியவந்துள்ளது

சம்பளத்தில் நயன்தாராவை முந்திய தீபிகா படுகோனே

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ஒரு படத்திற்கு 18 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக கூறப்பட்டது. இதுவரை ரூபாய் 10 கோடி வாங்கி வந்தவர் தற்போது அதிக பணம் கேட்பதாக திரை உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது ..இந்த நிலையில் ஆந்திராவில் நடிகர் பிரபாஸ் ஜோடியாக .நடிக்க நடிகை தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் 20 கோடி சம்பளம் கேட்டுள்ளார். திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகு 20 கோடி சம்பளம் பெற்று […]

நடிகர் சந்தானம் பெருமாளை கிண்டல் செய்தாரா?

நடிகர் சந்தானம் தற்போது நகைச்சுவை கலந்த கதாநாயகன் இடத்தில் படங்களில் நடித்து வருகிறார் அவர் டிடி ரிட்டர்ன் படத்தின் அடுத்த பாகத்தில் தற்போது நடித்துள்ளார் அதில் அவர் பெருமாளை கிண்டல் செய்வதாக விமர்சனம் எழுந்தது இது பற்றி கேட்டபோது “நான் பெருமாள் பக்தர். கடவுள் பாடல் வைக்க வேண்டும் என்ற ஆசையில்தான் அந்தப் பாடலை வைத்தேன். அதில் கிண்டல் செய்யவில்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. என்றார்.

கடைசி படத்தில்போலீஸ் அதிகாரியாக நடிக்கும் விஜய்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து விட்டார். இருந்தாலும் கடைசியாக அவர் ஜனநாயக ன் என்ற படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியல் ஈடுபட போவதாக கூறியுள்ளார் இந்த படத்தில் அவர் என்னிடத்தில் நடிக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது அவர் போலீஸ் வேடத்தில் அந்த படத்தின் நடிப்பதாக தெரியவந்துள்ளது.