தாம்பரம் மாநகராட்சி ராஜேந்திர பிரசாத் சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக பாதாள சாக்கடை மேனுவல் உடைந்து கழிவு நீர் வெளியேறி சாலை முழுவதும் ஆறாக ஓடும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் மக்கள் கடும் அவதி

பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள்,மேயர், மண்டல தலைவர், மாமன்ற உறுப்பினர் மக்கள் கடும் குற்றச்சாட்டு

சென்னை குரோம்பேட்டை அடுத்த ராஜேந்திர பிரசாத் சாலை, அஸ்தினாபுரம் செல்லும் முக்கிய பிரதான சாலை இச்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன இதன் மத்தியில் 1000 கணக்கான குடியிருப்பு பகுதியில் உள்ள முக்கிய பிரதான சாலையில் 4 க்கும் மேற்பட்ட முக்கிய பள்ளிகள் மற்றும் குமரன் குன்றம் முருகன் கோயில், செல்வ விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில் ஸ்தலங்களுக்கு செல்கின்ற முக்கிய இச்சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக பாதாள சக்கடை மேனுவல் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி சாலை முழுவதும் ஆறு போல ஓடுகின்றது இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள், பொது மக்கள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதைக் குறித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரியிடம் மேயரிடமும் மண்டல தலைவரிடமும் வாடு மன்ற உறுப்பினரும் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கும் எடுக்கப்படவில்லை என மக்கள் கடுமையாக குற்றச்சாட்டு இப்பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம் அவருக்கு வருகை தந்த மாநகராட்சி மேயர் வசந்தகுமார் இடம் முறையிட்டபோது இதைவிட பெரிய வேலை இருக்கின்றது என கடந்து சென்றதாகும் மக்கள் குற்றச்சாட்டு எழுப்பினர் அப்பொழுது இது முக்கிய சாலையில கழிவுநீர் வெளியேறி ஆயிரக்கணக்கான மக்கள் மாணவ பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவது பெரிய விஷயமாக தெரியவில்லை அதைவிட பெரிய வேலை இருப்பதாக மேயர் கடந்து செல்வது ஆளும் திமுக கட்சியின் அராஜப்போக்கை காட்டுகிறது என மக்கள் குற்றச்சாட்டு எழுப்பினர்.
இன்னும் காலதாமதம் ஏற்ப ட்டால் மக்களை திரட்டி இச்சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.