Chrompet 06 Oct 2024
குரோம்பேட்டையில் ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகை கொள்ளை
குரோம்பேட்டை போஸ்டல் நகர், தனலட்சுமி தெருவை சேர்ந்தவர் மாலதி ராணி இவர் பொத்தேரி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இவரது வீட்டில் பால அரவிந்த் என்பவர் மனைவியுடன் வாடகைக்கு தரைதளத்தில் குடியிருந்து வருகிறார்..மாலதி ராணி அடையாரில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்வாடகைக்கு குடியிருந்த பால அரவிந்த் மனைவி மற்றும் உறவினர்களுடன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்க சென்றார்.. இருவரும் இரவு திரும்பி வந்தபோது வீட்டின் கதவுகள் […]
Chrompet 29 Sep 2024
குரோம்பேட்டை புருஷோத்தமநகர் ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த போது எடுத்த படம்
குரோம்பேட்டை ஜிஎஸ்டி ரோட்டில் உள்ள எஸ்கலேட்டர் பழுதாகி உள்ளது. கடந்த ஒரு மாதமாக அது பழுது பார்க்கப்பட வில்லை. நெடுஞ்சாலைத்துறை பழுது பார்க்காததை கண்டித்து குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அதன் தலைவர் வி. சந்தானம், போலீஸ் கிருஷ்ணமூர்த்தி, வணிகர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன், அர்கீஸ்வரர் காலனி நலச் சங்கத்தின் செயலாளர் தன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர்.
Chrompet 22 Sep 2024
குரோம்பேட்டையில் வழிப்பறி நடைபயிற்சியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
குரோம்பேட்டையில் நடைபயிற்சிக்குச் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். குரோம்பேட்டை விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் சாந்தகுமாரி(59), இவர் குரோம்பேட்டை எம்.ஐ.டி.சிக்னல் அருகே சர்வீஸ் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார்.இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டு கத்தினார். பின்னர் பொதுமக்கள் உதவியோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் காவல்துறையினர் […]
Chrompet 15 Sep 2024
பஸ் டிரைவரை தாக்கிய சட்டக் கல்லூரி மாணவி வைரல் வீடியோ
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் மாநகர பேரூந்து ஓட்டுனர், நடத்துனரை தாக்கிய சட்டகல்லூரி மாணவி, அவர் கணவர் உள்ளிட்ட 4 பேரை குரோம்பேட்டை போலீசார் கைதுசெய்தனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அதிமுக கொடிகட்டிய காரும் பறிமுதல் தொடந்து விசாரணை திருவான்மியூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் தடம் எண் 91V மாநகர பேரூந்தை ஓட்டுனர் அசோக்குமார் ஓட்டி சென்றார். நடத்துனர் இருசப்பன் உள்ளிட்ட பயணிகள் பேரூந்தில் இருந்த நிலையில் குரோம்பேட்டையில் பேரூந்து நிறுத்தத்தில் நிற்க ஓரமாக பேரூந்தை அசோக்குமார் ஓட்டியுள்ளார். […]
குரோம்பேட்டையில் பஸ் ஊழியர்கள் திடீர் மறியல் வழக்கறிஞர்கள் தாக்குதல் எதிரொலி
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் காரை உரசியதாக அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு சென்னை திருவான்மையூரில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை ஓட்டுனர் இருச்சப்பன் மற்றும் நடத்துனர் அசோக குமார் குரோம்பேட்டை அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ காரின் மீது உரசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்து அரசு பேருந்து வழிமறித்து காரில் […]