
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் புயல் வெள்ளம் பாதிப்பு கடுமையாக உள்ளது.
குறிப்பாக முடிச்சூர் வரதராஜபுரம் போன்ற பகுதிகளை அடக்கிய மேற்கு தாம்பரம் தொடர்ந்து வெள்ளத்தில் தத்தளிக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்பட்டபோது முடிச்சூர் வரதராஜபுரம் பகுதிகளில் தண்ணீர் உள்ளே செல்ல முடியாமல் தேங்கி இருப்பதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதி ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளத்தில் தான் மூழ்கி தவிக்கிறது. காரணம் இந்த பகுதியில் ஏராளமான வீடுகள் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதியில் மக்களை மீட்கவும் நிவாரண உணவு நிவாரண உதவிகள் வழங்கவும் அதிகாரிகள் தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள். அதேபோல கிழக்கு தாம்பரம் பகுதிகளும் குரோம்பேட்டை அஸ்தினாபுரம் சிட்லபாக்கம் சேலையூர் மேடவாக்கம் போன்ற பகுதிகளில் பல பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் தேங்கியுள்ளது. மழை நின்ற பிறகு தான் அதிகாரிகளும் மாநகராட்சி ஊழியர்களும் செயலில் இறங்கினார்கள். கணேஷ் நகர் சிப்லபாக்கம் சேலையூர் போன்ற பகுதிகளில் ஏராளமான மின் கம்பங்களும் மரங்களும் விழுந்து உள்ளன. அவற்றை வெட்டி அப்புறப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இன்னும் பல பகுதிகளுக்கு மீண்டும் மின்சப்ளை கொடுக்கப்படாத நிலை உள்ளது. எனவே மின்வாரியத்திற்கு இந்த பகுதிகளில் இருந்து ஏராளமான பேர் தினசரி செல்போனில் அழைத்து எங்கள் பகுதிக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்த வண்ண உள்ளனர் ஆனால் மின்வாரிய ஊழியர்கள் குறைவாக இருப்பதால் எல்லா பகுதிக்கும் ஒரே நேரத்தில் செல்ல . இதனால் அதிருப்தி அடைந்துள்ளனர். ஒரு பகுதிக்கு மின்சப்ளை கொடுக்க வரும்போது அந்த பகுதி மக்கள் அவர்களை கண்டிக்கிறார்கள். இதிலிருந்து தப்பிக்க மின்வாரிய அதிகாரிகள் செல்லும் பகுதிகளுக்கு போலிஸ்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சேலையூர் பகுதியில் ஏராளமான இடங்களில் மரங்களும் விழுந்துள்ளன. அங்குள்ள ராஜேஸ்வரி நகர் சந்தான லட்சுமி தெரு மற்ற பகுதிகளை விட தாழ்வாக உள்ளது. அங்கே சிமெண்ட் சாலை அமைத்த போதிலும் மற்ற பகுதியில் உள்ள சிமெண்டு சாலையை மீண்டும் தார் சாலையாக மாற்றி உயரத்தை அதிகரித்து விட்டார்கள். இதனால் அந்த பள்ளமாகி விட்டது. அனைத்து மழை நீரும் சந்தான லட்சுமி தெரு வழியாக அங்குள்ள விஜய் சாந்தி குடியிருப்புக்குள் சென்றது .
அந்த குடியிருப்பில் 75 வீடுகள் உள்ளன அங்கு உள்ள 120 அடி நீளம் சுவர் வெள்ளம் தாங்காமல் உடைந்து விழுந்தது. தற்போது அவர்களே மோட்டார் ஏற்பாடு செய்து மழை நீரை வெளியேற்றியுள்ளனர்.
அந்த பகுதியை அதிகாரிகளோ அரசியல்வாதிகளா யாருமே வரவில்லை.
அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு கவுன்சிலரிடம் இது பற்றி கூறிய போது அவர்கள் எல்லாம் ஓட்டு போட வருவதில்லை என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து இப்போதுதான் பழைய நிலைமைக்கு வந்து கொண்டிருக்கிறது