சிட்லபாக்கத்தில் கார் மோதி விழுந்த மின்கம்பம் | உடனே அகற்ற கவுன்சிலர் நடவடிக்கை

சிட்லபாக்கத்தில் கார் மோதி மின்கம்பம் கீழே சாய்ந்தது அதனை அகற்ற கவுன்சிலர் ஜெகன் உடனடியாக நடவடிக்கை எடுத்தார் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கம் 43வது வார்டுக்கு உட்பட்ட பாபு தெரு மற்றும் கலைவாணர் தெரு சந்திப்பில் சனிக்கிழமை காலை 5:45 மணி அளவில் கார் மோதியதில் மின் கம்பம் உடைந்து சாய்ந்தது. பற்றிய தகவல் அறிந்த மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் சம்பவ இடத்திற்கு. விரைந்து வந்தார் . சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து, கிரேன் இயந்திரம் மூலம் […]

சிட்லபாக்கத்தில் பாதாளசாக்கடை நீர் சாலையில் ஓடுவதால் துர்நாற்றம் பொதுமக்கள் பாதிப்பு

தாம்பரம் மாநகராட்சி சிட்லப்பாக்கம் திரு.விக.நகர் பகுதியில் பாதாளச்சக்கடை அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் வழிந்து செல்வதால் திரு.வி.கா நகர், சர்வ மங்களா நகர் உள்ளிட்ட பகுதியில் கடும் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் சென்றாலும் கழிவு நீர் படுவதால் அசுத்தம் ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

37-வது வார்டில் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.

செம்பாக்கம் வடக்கு பகுதி திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பகுதி செயலாளர் ஏ.கே.கருணாகரன்* தலைமையில் 37-வது வார்டு பெரியார் சாலை அண்ணா நகர் நல சங்க கட்டிடத்தில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.. முகாமை அமைச்சர் தா.மோ.அன்பரசன்* தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தாம்பரம் மேயர் க‌.வசந்தகுமாரி துணை மேயர் கோ.காமராஜ் மண்டலம் 2 தலைவர். திஇ.ஜோசப் அண்ணாதுரைபல்லாவரம் தெற்கு பகுதி செயலாளர்இ.எஸ்.பெர்னாட். மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அ.தமிழ்மாறன் […]

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மழை காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாரும் பணியினை தொடங்குவதற்கு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் கோரிக்கை விடுத்தார்

இதையொட்டி மண்டலம் 3 சிட்லபாக்கம் 43வது வார்டில் மழைநீர் வடிகால்வாய்களை ஒப்பந்ததாரரின் மூலம் தூர் அகற்றும் பணி துவங்கி வைக்கப்பட்டது. அப்போது தி.மு.கழக நிர்வாகிகள் ப.இலக்ஷ்மணன், பார்தசாரதி, அருள் மற்றும் ஜெரி உடன் இருந்தனர்.

நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.சு.சிவராசு, இ.ஆ.ப., அவர்கள் தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் பகுதியில் அமைந்துள்ள MIT கல்லூரி வளாகத்தில் தூய்மையின் சேவைக்கான (Swachatta Hi Seva)விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு.சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.கருணாநிதி, மாநகராட்சிதுணை மேயர் திரு.கோ.காமராஜ், மண்டலக்குழு தலைவர்கள் திரு.வே.கருணாநிதி, திரு.ஜோசப் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சிட்லபாக்கத்திற்கு உட்பட்ட அம்பேத்கர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் செவி & பேசும் திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி பள்ளியில் அரசு பள்ளி கல்வி மேலாண்மை கட்டமைப்பு குழுவின் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த கட்டமாக அம்பேத்கர் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் கலை திருவிழா நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் சென்னை சென்ட்ரல் சிட்லபாக்கம் அரிமா சங்கம் கலந்து கொண்டு விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினர். நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் அப்பள்ளியில் ஆசிரியர்களை வணங்குவதையும், பள்ளிக்கு செல்வதற்கு முன் தாய் தந்தையரை வணங்குவதையும் குறித்தும் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார்.

சிட்லபாக்கத்தில் 21,000 விநாயகர் சிலை கண்காட்சி

சிட்லப்பாக்கத்தில் விநாயகர் பக்தர் சீனிவாசன் 17 வது ஆண்டாக 21 ஆயிரம் விநாயகர் சிலைகள், பொம்மைகள், படங்கள் என அரை சென்டிமீட்டர் முதல் 9 அடி உயரம் உள்ள சிலைகள் தயார் செய்தும், சேகரித்தும் அவரின் திருமண மண்டபத்தில் மூன்று அடுக்குகளிலும் காட்சிப்படுத்தியுள்ளார். முற்றிலும் இலவசமாக 11 நாட்கள் 07.09.24 முதல் 17.09.24 வரை காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை திறக்கப்படும். இந்த […]

குரோம்பேட்டை ஸ்டேட் பாங்க் காலனி நேரு பார்க் துப்புரவு பணிகளை ஜெய் கோபால் கரோடியா பள்ளி என்.எஸ்.எஸ்.மாணவர்கள் மேற்கொண்டனர்

சிட்லபாக்கம் மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன், பிரதாப், சுனில், சீனிவாசன், கே.பிரதாப் உட்பட பலர் பங்கேற்றனர். தாமரைக்கண்ணன் நன்றி தெரிவித்தார்.

மூத்த குடிமக்கள் தினத்தை முன்னிட்டு ஐசிஐசிஐ வங்கி சிட்லபாக்கம் கிளையில் டிகேஸ் ஹீல் அண்ட் க்யூர், சிட்லபாக்கம் நிறுவனர் கார்த்திக் மற்றும் டாக்டர்.திவ்யா கார்த்திக் பிசியோதெரபி விழிப்புணர்வு முகாம் நடத்தினர்

இதில் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் சென்ட்ரல் ஹஸ்தினாபுரம் எம்.ஜெயபால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மற்றும் கிளை மேலாளர் சிவா, துணை கிளை மேலாளர் ராஜாபிரபு மற்றும் தொடர்பு மேலாளர் ஜெயஸ்ரீ முருகன் ஆகியோரும் பங்கேற்றனர்.

சிட்லபாக்கம் சிவி ராமன் தெருவில் ராயல் ஜாஸ்மின் குடியிருப்பில் வசிக்கும் சிறுவன் முத்துகிருஷ்ணன்

சுதந்திர தினத்தன்று மகாத்மா காந்தி வேடத்தில் தோன்றியதை பார்த்து அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.