
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார் எனவும், அதற்கான அறிவிப்பு வருகின்ற முதல் வாரத்தில் வெளிவர உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் பாஜக மாவட்ட தலைவர்கள் புதியதாக அனைத்து மாவட்டங்களுக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு மீண்டும் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்பட பலர் பாஜக தலைமையிடம் கேட்டு உள்ளனர். ஆனால் கோவையை சேர்ந்த ஏ. பி. முருகானந்தத்தை அண்ணாமலை பரிந்துரைத்துள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக இருப்பவர் கோவையைச் சேர்ந்த
ஏ.பி.முருகானந்தம். பாஜக ஆட்சியில் இல்லாத கேரளா, மேற்குவங்கம் மற்றும் வட மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் போராட்டம் செய்வதற்கான குழுவில் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர்.
தீவிரவாத அமைப்புகளை கடுமையாக எதிர்த்து பல வகைகளில் போராட்டம் நடத்தி தடை செய்வதில் பெரும்பங்கு ஆற்றியவர். திருப்பூரில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்டவர். வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி அன்று தமிழ்நாடு பாஜக தலைவராக ஏ. பி. முருகானந்தம் நியமிக்கப்படும் அறிவிப்பு வெளியாகும் என்ற டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.