தாம்பரம் மாநகராட்சி சிட்லப்பாக்கம் திரு.விக.நகர் பகுதியில் பாதாளச்சக்கடை அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் வழிந்து செல்வதால் திரு.வி.கா நகர், சர்வ மங்களா நகர் உள்ளிட்ட பகுதியில் கடும் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் சென்றாலும் கழிவு நீர் படுவதால் அசுத்தம் ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.