காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பத்திர பதிவு அலுவலக அருகே சிந்தாரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வியாபாரி முஷாமல் முகமது என்பவர் படப்பை அருகே ஒரு இடத்தை வாங்கி பத்திரப்பதிவு செய்வதற்காக தான் கொண்டு வந்த கார் டிக்கியில் 6 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து விட்டு.
பத்திரபதிவு அலுவலகத்திற்குள் சென்று தன் வாங்கிய இடத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது காரின் டிரைவர் கண்ணாடி உடைக்கப்பட்டு காரின் டிக்கி திறக்கப்பட்டு அதிலிருந்து 6 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்றதாக பாதிக்கப்பட்ட வியாபாரி மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் அளித்த அவரது தகப்பனாரிடம் இருந்து சம்பவ இடத்தை நேரில் பார்வையிடுவதற்காக மணிமங்கலம் காவல் நிலையத்தில் பணி புரியும் காவலர் சதீஷ்குமார் என்பவர் ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார்.

அதேபோல் கைரேகை பிரிவில் பணிபுரியும் காவலர் ஏழுமலை அவருக்கு உடந்தையாக இருந்து உள்ளார்.

இது சம்பந்தமாக தாம்பரம் மாநகர காவல் ஆணையாளரிடம் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்தன் படி காவலர்கள் சதீஷ்குமார் ஏழுமலை ஆகியோரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் உத்தரவிட்டார்.