மணிமங்கலம் அருகே தீ விபத்தால் முற்றிலுமாக வீடு எரிந்து வாழ்வாதாரம் பாதிக்கபட்ட தாய் மற்றும் அவரின் மாற்றுதிறனாளி மகனுக்கு உதவி கரம் நீட்டிய போலீசார், அப்பகுதியினர் பாராட்டு

சென்னை மணிமங்கலம் அடுத்த கரசங்கால் எல்.ஐ.சி காலணியை சேர்ந்தவர் செல்வி வீட்டு வேலை செய்து வருகிறார். இவருடைய மாற்றுதிறனாளி மகன் சதீஷ் கூலி வேலை செய்து வருகிறார்.

நேற்று இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில் மதியம் திடிரென குடிசை வீடு பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் போராடி தீயை அனைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த பொருட்கள், அரசு சான்றிதழ்கள்,என அனைத்தும் தீயில் கருகின.

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள மணிமங்கலம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பொருட்கள் முழுவதுமாக தீயில் கருகியதால் அடுத்த வேளை சாப்பாட்டிற்கும் துணிகள் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ள தாய் மற்றும் அவரின் மாற்றுதிறனாளி மகனுக்கு உடனடி உதவி செய்யுமாறு தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின் படி மணிமங்கலம் ஆய்வாளர் அசோகன் மற்றும் போலீசார் புதிதாக வீட்டு உபயோக பொருட்கள்,ஒரு மாதத்திற்க்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள்,கேஸ் ஸ்டவ் ஆகியவற்றை நேரில் சென்று பாதிக்கபட்டவர்களிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.

மேலும் வீட்டின் மேற்கூறையை புதிதாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்வதற்க்கு நடவடிக்கை எடுக்கபடும் என்றும் கூறினர்.

போலீசாரின் இச்செயலை அப்பகுதியினர் பாராட்டி வருகின்றனர்.