
சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சிவகுமார் (வயது- 53) இவர் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட சேலையூர் போக்குவரத்து சிறப்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகுமார் பணி முடிந்து இன்று அதிகாலை தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார்,அப்போது ஆலந்தூர் அருகே ஆசர்கான பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த தனியார் பேருந்தில் பின்னால் எதிபாரதவிதமாக விதமாக மோதி விபத்துக்குள்ளானர்.
இதில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சிவகுமாருக்கு தலை,தாடை, இரண்டு கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்து உள்ளார்.இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு பரங்கிமலையில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதித்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.மேலும் இந்த விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகுமார் இரவு பணி முடித்து தூக்க கலகத்தில் சென்றதால் விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் சேலையூர் போக்குவரத்து காவல் நிலைய சரக்கத்தில் குறைந்த அளவிலே போக்குவத்து காவலர்கள் இருப்பதால் சிவகுமார் அடிக்கடி இரவு பணி செய்வதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று இரவு பணி செய்துவிட்டு தூக்க கலக்கத்தில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்ற போது விபத்து ஏற்பட்டு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.