
எப்போதும் கண்டிராதவாறு மகளிர்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க முன்வந்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முதல் நாள பிரச்சாரத்தில் பேச்சு,
தற்போது மகளிர்களுகான ஆட்சியை சகோதரனாக செயல்பட்டு திமுக தலைவர் நடத்தி வருகிறார். டி.ஆர்.பாலு பேச்சுக்கு பெண் ஒருவர் உங்களை நம்பிதான் இருக்கோம் என எதிர் குரல் எழுப்பி வேட்பாளரை உற்சாகபடுத்தினார்.
ஸ்ரீபெரும்புதூர் இந்தியாகூட்டணி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு திருநீர்மலை ரங்கநாதபெருமாள் கோவில் முன்பாக முதல்நாள் பிரச்சாரத்தை துவக்கினார்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணைமேயர் காமராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட இந்தியாக கூட்டணி கட்சியினருடன் மேளம் தாளம் முழங்க இருசக்கர பேரணியுடன் முதல்நாள் பிரச்சாரத்தை துவக்கினர்.
திருநிர்மலை, லஷ்மிநகர், துர்காநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் படை சூழ இந்தியாக கூட்டணி கட்சியினர் வரவேற்றனர்.
அப்போது பேசிய ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தளபதி தலைமையிலான ஆட்சி, உங்கள் ஆட்சி, பெண்களுக்கான ஆட்சி, சகோதரராக செயல்பட்டு அள்ளும் பகலும் திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறார் என்றார்.
அப்போது எதிர் குரல் எழுப்பிய பெண் ஒருவர் உங்களை நம்மிதான் இருக்கோம் என குரல் எழுப்பினார்.
அதற்கு உங்களை நம்பிதான் திமுக தலைவர் இருகார் என கூறினார்.
அதனையடுத்து மற்றொரு இடத்தில் பேசிய டி.ஆர்.பாலு:-
இன்று முதல்நாள் பிரச்சாரம் மக்களுடன் கலந்துரையாடல் போன்று இருந்தது.
7 எம்.பி தேர்தலில் போட்டியிட்டுள்ளேன் எந்த தேர்தலிலும் கண்டிராதவாறு பெண்கள் அபரிவிதமாக வாக்களிக்க முன்வந்துள்ளது தெரியவருகிறது என்றார்.