ஃபெஞ்சல் புயல் பாதிப்பில் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு.
5 ஆம் தேதி மாலை நிலவர சேத/இழப்பு விபரங்களின்படி 28 பேர் உயிரிழப்பு. 95,980 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிக்கை
பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
“ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய சேதத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.2,000 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்”
7 பேரை மீட்கும் பணியில் தொய்வு: அமைச்சர் விளக்கம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது; இடிபாடுகளில் 7 பேர் சிக்கியுள்ளனர். எப்படியாவது அவர்களை காப்பாற்றியாக வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் முயன்று வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புபடையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு பாறை ஒன்று மிகப்பெரிதாக உள்ளது. […]
தூத்துக்குடி மதுரா கோட்ஸ் மில் இன்றுடன் தனது பனியை முடித்துக் கொள்வதாக தகவல்?
நேற்று இரவு 11மணிக்கு மதுரா கோட்ஸ் மில் தூத்துக்குடியில் எல்லா வகையான பணிகளையும் முடிவுக்கு கொண்டு வந்தது. 144 ஆண்டு கால வரலாறு படைத்த புகழ் பெற்ற தொழில் நிறுவனத்திற்கு இப்படி ஒரு நிலமையா?? 1970 களில் அரசு வேலையை நிராகரித்து விட்டு இருமடங்கு சம்பளம் இந்த மில்லில் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்த மில் தொழிலாளர்களின் வாழ்க்கையை நம்மால் மறக்கவே முடியாது. இவர்கள் கூட்டமாக வேலைக்கு செல்லும் அழகே தனி. மேலும் ஹார்வி மில்லில் ( […]
அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது – வைகோ.
திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கனத்த இதயத்துடன் பேசியுள்ளார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:- ஈழத்திற்கு சென்று பிரபாகரனை சந்திக்க வேண்டும் என சீட்டு மூலம் இரண்டு முறை கூறிய பின்னர்தான் பிரபாகரன் நான் ஈழத்திற்கு வர சம்மதம் தெரிவித்தார். அதன் பின்னர் இங்கிருந்து புறப்படும் முன் என் மனைவிக்கு பட்டு புடவை என்னுடைய குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் எடுத்து கொடுத்தேன். மீண்டும் நான் […]
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் பள்ளி கல்வித்துறை சங்கங்கள் யாவும் தங்கள் மீதான திமுக அரசின் கவனிப்பற்ற தன்மையைக் கண்டித்து கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டுள்ளன
பள்ளிகளில் ரெகுலர் ஆசிரியர்கள் போக குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த ஆசிரியர்கள் நியமித்தல் தவறானது என்றும் இன்னும் பல விதமான கோரிக்கைகளை முன்வைத்து முதல்வரை சந்திக்க சென்றால் அவர்களை ஸ்டாலின் சந்திக்க மறுத்து விட்டார். திமுகவை ஆட்சிக்கட்டிலில்அமர வைத்து அழகு பார்த்தோம்! இப்போது முதல்வராக இருப்பதால் சந்திக்க மறுக்கிறீர்கள் !நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது எங்களை சந்திக்க முடிந்தது. ஆனால் இப்போது மட்டுமென்ன மறுப்பு! அடுத்த தேர்தலில் உங்களை மறுபடியும் எதிர்க்கட்சி தலைவராக்கி வைப்பது தான் சிறந்தது […]
மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவான அரசு தி.மு.க., அரசு. தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாத காரியம். அமல்படுத்துவது மத்திய அரசின் கைகளில் தான் உள்ளது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்
பதவி பறிக்கப்பட்ட அமைச்சர்கள்: பின்னணியில் நடந்தது என்ன?
அமைச்சரவை மாற்றம் குறித்து, சமீபத்தில் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களிடம், ‘மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது’ என, முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். ஆனால், அமைச்சரவை மாற்றம் பலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள நிலையில், மாற்றத்தின் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக அமைச்சரவையில் இருந்து, மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். புதிய அமைச்சர்களாக செந்தில்பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மூத்த அமைச்சர்கள் சிலரின் துறைகள் மாற்றப்பட்டுஉள்ளன. இதன் […]
கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர். திருமாவளவன்
கருணாநிதியைவிட கொள்கை பகைவர்களுக்கு ஆபத்தான பேராளுமையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;- “முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சந்தித்த நெருக்கடிகளை விட அதிக நெருக்கடிகளை சந்திக்கும் நிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார். இருப்பினும், அனைத்து நெருக்கடிகளையும் அவர் தாக்குப்பிடித்து நிற்பார். கருணாநிதியை விட ஸ்டாலின் மிகவும் ஆபத்தானவர் என எதிரிகள் சொல்கிறார்கள் என்றால், அவர்கள் எந்த அளவிற்கு அச்சம் அடைந்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். […]
செந்தில் பாலாஜிக்கு ஜாமின்- நாட்டுக்கு தியாகம் செய்ததைபோல் சித்தரிக்க முயலும் மு.க.ஸ்டாலின்: தமிழிசை
செந்தில் பாலாஜி மீது பல்வேறு ஊழல் புகார்களை கூறியதே தி.மு.க.தான். ஜாமீனுக்கும், விடுதலைக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் கொண்டாடி மகிழ்கிறீர்களே