புதுமணத் தம்பதிகளான காங்கிரஸ் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசரின் மகன் சாய் விஷ்ணு மற்றும் நடிகை மேகா ஆகாஷ் ஆகிய இருவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து, அவரது ஆசி பெற்றுள்ளனர்
நிர்மலா சீதாராமனுக்கு ஜோதிமணி எம்.பி கண்டனம்!
அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும் -ஜோதிமணி எம்.பி
நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். விஷமி. அழிவுகரமானவர். அவரால் பிரதமராக முடியாவிட்டால் இந்த தேசத்தை அழித்துவிடலாம் என்பதே அவரது செயல்திட்டமாக உள்ளது. நமது பங்குச் சந்தையை குறிவைத்து வெளியிடப்பட்ட ஹிண்டன்பெர்க் அறிக்கை, ராகுல் காந்தி ஆதரவுடன் வெளியானது என்பது நேற்றிரவு உறுதியானது. இந்த தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க ராகுல் காந்தி எல்லா முயற்சிகளையும் செய்கிறார். ராகுல் காந்தி அவர்களே, உங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சியில் அமர தயாராகுங்கள். நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் பிரதமராக்க […]
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் முதல் எம்.பி.யாக பிரதமர் மோடி பதவியேற்றுக் கொண்டார்
தற்காலிக சபாநாயகர் மஹ்தாப் பிரதமர் மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
டெல்லி: இடைக்கால சபாநாயகராக பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் பதவியேற்றார்,ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
காங்கிரஸ் எம்பிக்களின் எண்ணிக்கை 100-ஐ தொட்டது!
மகாராஷ்டிரா சங்கிலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட விஷால் பாட்டில் காங்கிரஸில் இணைந்தார்
மோடிக்கு மேலும் 10 எம்.பி.க்கள் ஆதரவு
மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைய சுயேட்சை, சிறு கட்சிகளை சேர்ந்த மேலும் 10 எம்.பி.க்கள் ஆதரவு அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான குட்கா வழக்கை
எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் சிபிஐ முதன்மை நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்துள்ளது
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்.பி. ப்ரிஜ்பூஷனின் மகன் கரன் பூஷனுக்கு பாஜக சார்பில் சீட் வழங்கியது குறித்து மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் X தளத்தில் பதிவு
“நாங்கள் அனைவரும் எங்கள் தொழிலை பணயம் வைத்து, வெயிலிலும் மழையிலும் பல நாட்கள் தெருக்களில் தூங்கினோம். இன்று வரை ப்ரிஜ் பூஷன் கைது செய்யப்படவில்லை. நாங்கள் எதையும் கோரவில்லை. நீதியை மட்டுமே கோருகிறோம். கைது செய்வதை விடுங்கள், இன்று ப்ரிஜ் பூஷனின் மகனுக்கு சீட் கொடுத்து நாட்டின் கோடிக்கணக்கான மகள்களின் மன உறுதியை உடைத்துள்ளீர்கள்” – சாக்ஷி மாலிக்
திமுக அணிக்கு வாக்களிக்க பெண்கள் ஆர்வம் டி.ஆர் பாலு பிரசாரம்
எப்போதும் கண்டிராதவாறு மகளிர்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க முன்வந்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முதல் நாள பிரச்சாரத்தில் பேச்சு, தற்போது மகளிர்களுகான ஆட்சியை சகோதரனாக செயல்பட்டு திமுக தலைவர் நடத்தி வருகிறார். டி.ஆர்.பாலு பேச்சுக்கு பெண் ஒருவர் உங்களை நம்பிதான் இருக்கோம் என எதிர் குரல் எழுப்பி வேட்பாளரை உற்சாகபடுத்தினார். ஸ்ரீபெரும்புதூர் இந்தியாகூட்டணி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு திருநீர்மலை ரங்கநாதபெருமாள் கோவில் முன்பாக முதல்நாள் பிரச்சாரத்தை துவக்கினார். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் […]