செங்கல்பட்டுவில் இருந்து சென்னை கடற்கரை சென்ற மின்சார ரெயிலில் முதல்வகுப்பு பெட்டியில் லோகேஷ்(37) என்பவர் பயணித்துள்ளார்.அப்போது தாம்பரம் வருமுன்பாக பெண் டிக்கெட் பரிசோதகர் பிரித்தி சோதனை செய்தபோது முதல் சாதாரண பெட்டியில் பயணம் செய்யும் டிக்கட் மட்டும் எடுத்தது தெரிய வந்தது, இதனால் தாம்பரத்தில் அபராத தொகை வசுலிக்க கூட்டிச்சென்ற நிலையில் தப்பியோடியுள்ளார், பெண் டிக்கெட் பரிசோதகர் பிடிக்க சொல்லி குரல் எழுப்பியதால் அங்கு டீ குடித்துக்கொண்டு இருந்த பேனிஷ் என்கிற டி.டி.ஆர் உள்ளிட்ட இருவர் பிடித்துள்ளனர், அப்போது பேனிசை லோகேஷ் தாக்கியுள்ளார், பதிலுக்கு பேனிசும் தாக்க அங்கிருந்த பொதுமக்கள் யாரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர்,பிடிப்பட்ட லோகேசை தாம்பரம் இருப்பு பாதை போலீசில் ஒப்படைத்த நிலையில் அவர் அபராதம் செலுத்தினார்,மேலும் லோகேஷ் குறித்து விசாரித்து எழுதிவாங்கிய போலீசார் இருத் தரப்பிலும் சமாதனமாக போவதாக தெரிவித்ததன் பேரில் அனுப்பிவைத்தனர்,அதே வேளையில் பேனிஷ் கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் ரெயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்,அதே நேரத்திலஇருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் காட்சியை செல்போனில் ஒளிப்பதிவு செய்து சமுக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில் அந்த காட்சிகள் வைரலாக பரவிவருகிறது…