ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்ததால் 5 ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு
விக்ரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையே ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் விரைவு ரயில் மதுரை – சென்னை வைகை விரைவு ரயில் காரைக்குடி – சென்னை பல்லவன் விரைவு ரயில் சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் விரைவு ரயில் சென்னை – மதுரை தேஜாஸ் விரைவு ரயில் ஆகிய 5 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
மின்சார ரயில்கள் ரத்து
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று முதல் 28 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே 14 ரயில்கள், தாம்பரம்-கடற்கரை இடையே 14 ரயில்கள் ரத்து; இரு மார்க்கங்களிலும் 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 200 ரயில்கள் இயக்கப்படும்
மேலும் 10 புதிய வந்தே பாரத் ரயில்கள்.!
நாட்டில் விரைவில் 10 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதிவேக ரயில்களான வந்தே பாரத் ரயில்களை நாடு முழுவதும் இயக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வருகிற செப். 15ம் தேதி 10 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஜார்கண்ட் மாநிலத்தில் புதிய ரயில்களின் துவக்க விழா நடைபெற இருக்கிறது. வாரணாசி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு வந்தே பாரத் ரயில்வே இயக்கப்பட உள்ளன.
VandeBharat ரயிலை இயக்க அடித்துக் கொண்ட ஊழியர்கள்!
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவுக்கு புதிய வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் புதிய ரயில் ராஜஸ்தானின் காங்காபூர் நகருக்கு கடந்த 2-ம் தேதி வந்தபோது, அந்த ரயிலை ஓட்டுவதற்கு ரயில் டிரைவர்கள் போட்டியிட்டனர். இதனால் அவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 3 டிரைவர்கள் இன்ஜின் அறையின் ஜன்னல் வழியாக நுழைந்து உள்ளே செல்ல முயன்றனர். வந்தே பாரத் ரயிலில் ஏற்கெனவே வந்திருந்த ரயில் ஓட்டுநர்களை, இவர்கள் அடித்து வெளியேற்றினர்.
விநாயகர் சதுர்த்தி: சென்னை – கோவை சிறப்பு ரயில்.!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செப்டம்பர் 6 பிற்பகல் 3:45 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, ஈரோடு, திருப்பூர் வழியாக 11:45-க்கு கோவை சென்றடையும். இதே போல் மறுமார்க்கத்தில் செப்டம்பர் 8-ம் தேதி கோவையிலிருந்து இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு காலை 7:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.
உத்தரப் பிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து
விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் கான்பூர் மற்றும் பீம்சென் ரயில் நிலையங்களுக்கு இடையே விபத்து
தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி காரணமாக இன்றும் நாளையும் 55 மின்சார ரயில்கள் ரத்து!..
தென்மாவட்ட ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
வைகை உள்ளிட்ட சில தென்மாவட்ட ரயில்கள் செவ்வாய்க்கிழமைமுதல் எழும்பூருக்கு வராது என்ற அறிவிப்பில் மாற்றம் இல்லை. எழும்பூரிலிருந்து இயக்கப்படாத ரயில்கள் பற்றிய விவரம்: மதுரை செல்லும் வைகை விரைவு ரயில், திருச்சி செல்லும் ராக்ஃபோா்ட் விரைவு ரயில், காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் ஜூலை 24, 26, 27, 29, 31 தேதிகளில் […]
வந்தே பாரத் ரயில்களின் வேகம் விரைவில் குறைப்பு
ரயில்கள் சந்திக்கும் விபத்துகள் உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன. இதற்கு, ரயிலின் வேகமும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட, வந்தே பாரத், கதிமான் ரயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ.ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
செல்போன் விபரீதம் பெருங்களத்தூரில் ரெயில் மோதி பெண் இன்ஜினியர் பலி
பெருங்களத்தூரில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்த பெண் ஐ.டி பொறியாளர் மீது அந்தியோதையா விரைவு ரெயில் மோதி உயிரிழப்பு ஆந்திராவை சேர்ந்த பெண் மென் பொறியாளர் பிள்ளி தாரணி சத்தியா(23) சென்னையை அடுத்த பெருங்களத்தூர் உள்ள ஐ.டி கம்பெணியில் பணி செய்கிறார். இன்று காலை பெருங்களத்தூர ரெயில் கேட் அருகே செல்போனில் பேசியபடி சென்ற தண்டவாளத்தை கடந்தபோது திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் நோக்கிவந்த அந்தியோதைய விரைவு ரெயில் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பிரேதத்தை கைப்பற்றி தாம்பரம் […]