குரோம்பேட்டை ராதா நகர் கிருஷ்ணமாச்சாரி தெருவில் உள்ள வசந்த மண்டபத்தில் இன்று 23ஆம் தேதி மகா சுதர்சன ஹோமம் வெகு விமர்சையாக நடைபெற்றது காலை 5 மணிக்கு சுவாமி திருமஞ்சனத்துடன் ஓமம் தொடங்கியது மதியம் 12:30 மணிக்கு பூர்ணாகூதி நடந்துஹோமம் முடிந்து தீபாரனை காட்டப்பட்டு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது மேலும் பரீட்சைக்கு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனையும் செய்யப்பட்டது ஹோமத்தில் கலந்து கொண்ட உபயதாரர்களுக்கு தன்வந்திரி விக்ரம் வழங்கப்பட்டது இவ்விழாவில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி , மற்றும் தி.மு.க
மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மாறன் பி.இ. எம். பி. ஏ.கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார் விழாவில் திரளான பக்தர்கள் ஹோமத்தில் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர் முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை ராமசுப்பிரமணிய சுவாமி சபாவினர் சிறப்பாக செய்திருந்தனர்.