
ஐபிஎல் போட்டியை பார்த்து விட்டு அதிவேகமாக பைக்கில் சென்று மெட்ரோ தூணில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கால்வின் கென்னி, சித்தார்த்தன். இருவரும் நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியை கண்டு களித்துள்ளனர். பிறகு புல்லட் பைக்கில் வீட்டிற்கு திரும்பினர்.
பைக்கை கால்வின் கென்னி ஓட்டிச் சென்றார். அதிவேகமாக சென்றபோது ஆலந்தூர் மெட்ரோ ரயில் தூணில் கட்டுப்பாட்டை இழந்து மோதினர். இதில் 2 பேரும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரது உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் மதுபோதையில் இருந்தார்களா? போலீசார் சந்தேகியுள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரிய வரும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
