
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தமிழகம் வருகிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து இறங்கும் பிரதமர், அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் வரவுள்ளதாகவும்.புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்து, ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். அதன்பிறகு பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்கிறார். இதைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி செல்ல உள்ளதாக பா.ஜ.க நிர்வாகிகள் தெரிவித்தனர்.