நவராத்திரியின் ஐந்தாம் நாளில் பிரதமர் ஸ்கந்தமாதா தேவியை வழிபட்டார்
நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி ஸ்கந்தமாதா தேவியை வழிபட்டார். சமூக ஊடக வலைதளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:அன்னை துர்க்கையின் ஐந்தாவது வடிவமான ஸ்கந்தமாதா தேவியின் பாதங்களில் வணக்கம்! அனைவருக்கும் சுக்தாயினி – மோக்ஷதாயினி மாதாவின் ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும். இந்த நிகழ்ச்சியில் அவரைப் பற்றிய ஒரு புகழுரை
மெட்ரோ 2ம் கட்ட திட்டம் – மத்திய அமைச்சரவை நிதி ஒதுக்க ஒப்புதல்
சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல். மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க கோரி பிரதமர் மோடியை கடந்த வாரம் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.
மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களை சந்திப்பதற்காக புதுதில்லி வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களை சந்திப்பதற்காக புதுதில்லி வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை புதுதில்லி விமான நிலையத்தில், கழக மக்களவை குழுத் தலைவர் திரு. டி.ஆர்.பாலு, மக்களவை மற்றும் மாநிலங்களவை குழுத் தலைவர் திருமதி கனிமொழி, உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ஏ.கே.எஸ். விஜயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் […]
காமராஜுடன் மோடியை ஒப்பிட்ட தமிழிசை – காங்கிரஸ் எதிர்ப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழிசை சவுந்தரராஜன் மோடி ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என பேசி இருக்கிறார். மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற வெறுப்பு அரசியலையும், அதிகாரங்களை குவித்து வைத்துக்கொண்டு, சர்வாதிகார பாசிச முறையில் மோடியின் ஆட்சி செயல்பட்டு வருகிறது. அந்த ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிடுவது தமிழிசை சவுந்தரராஜனின் அறியாமையை காட்டுகிறத என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி அற்புதமானவர் – டொனால்ட் டிரம்ப்!
அடுத்த வாரம் அமெரிக்கா வரும் பிரதமர் மோடியை நான் சந்திக்க உள்ளேன்; அவர் ஒரு அற்புதமான மனிதர் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பேச்சு ஜோ பைடன் தலைமையில் நடைபெற உள்ள குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 21-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
வரும் 20ம் தேதி பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக தகவல்
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். பிரதமர் மோடி தரப்பில் இருந்து இதுவரை நேரம் வழங்கப்படவில்லை. நேரம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் வரும் 20ம் தேதி பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பார் என எதிர்பார்ப்பு மத்திய அரசின் சமக்கிர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காமல் உள்ளது. சமக்கிர சிக்ஷா அபியான் திட்ட நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை […]
வாகன உற்பத்தியாளர்கள் பசுமையான, தூய்மையான இயக்கத்தில் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்
தொழில்துறை பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்றார்
நான் மோடியை வெறுக்கவில்லை ஆனால் அவருடைய கருத்தில் நான் உடன்படவில்லை என ராகுல் காந்தி கூறியுள்ளார்
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக ரூ.113 கோடி செலவானதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தகவல் தெரிவித்துள்ளது
ராமர் கோயில் கட்டுமான பணிக்கு இதுவரை ரூ.1800 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது; ராமர் கோயில் கட்டுமான பணிக்காக அடுத்த 2 கட்டங்களில் ரூ.870 கோடி செலவு செய்யப்பட உள்ளது எனவும் கூறியுள்ளது.
ரக்ஷா பந்தன் – பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய பள்ளி குழந்தைகள்
டெல்லியில் பள்ளி குழந்தைகளிடம் ராக்கி கட்டிக்கொண்ட பிரதமர் மோடி ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து “உங்கள் உறவுகளில் புதிய இனிமையையும், வாழ்க்கையில் செழிப்பையும் கொண்டு வரட்டும்”