பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு- பாஜக நிர்வாகிக்கு முன்ஜாமின்
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் செல்வகுமார் மனு தாக்கல் செய்து இருந்தார். சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்வதற்கு முன்பாக அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
அன்னபூர்ணா உரிமையாளர் அவமதிப்பு: கார்கே கண்டனம்
அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். நியாயமான கேள்வியை தொழிலதிபர் சீனிவாசன் எழுப்பினார். தொழிலதிபர் சீனிவாசன் கேள்வி எழுப்பியபோதே சிரித்து நிர்மலா சீதாராமன் அவரை அவமானப்படுத்தினார். தொழிலதிபர் சீனிவாசனை பின்னர் கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்க வைத்ததற்கு கார்கே கண்டனம் தெரிவித்தார்.
“எடப்பாடி பழனிசாமி மீதான எனது கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன். அது 100% சரியானது”
சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி
நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். விஷமி. அழிவுகரமானவர். அவரால் பிரதமராக முடியாவிட்டால் இந்த தேசத்தை அழித்துவிடலாம் என்பதே அவரது செயல்திட்டமாக உள்ளது. நமது பங்குச் சந்தையை குறிவைத்து வெளியிடப்பட்ட ஹிண்டன்பெர்க் அறிக்கை, ராகுல் காந்தி ஆதரவுடன் வெளியானது என்பது நேற்றிரவு உறுதியானது. இந்த தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க ராகுல் காந்தி எல்லா முயற்சிகளையும் செய்கிறார். ராகுல் காந்தி அவர்களே, உங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சியில் அமர தயாராகுங்கள். நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் பிரதமராக்க […]
நடுத்தர வர்க்கத்தினரை பிரதமர் விளக்கு ஏற்ற சொன்னார், அதை செய்தார்கள்
கைதட்ட சொன்னார் , கேள்வி கேட்காமல் அதையும் செய்தார்கள் பிரதமர் சொன்ன அனைத்தையும் செய்தார்கள் ஆனால் அந்த நடுத்தர வர்க்கத்தினரை நெஞ்சிலும் முதுகிலும் பட்ஜெட் என்ற பெயரில் குத்தியிருக்கிறார் பிரதமர். பிரதமர் மோடி பட்ஜெட் மீதான உரையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சர்களே அச்சத்தில் உள்ளனர்
GST, பணமதிப்பிழப்பு மூலம் மக்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறது பாஜக ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள் ஒருவித அச்சத்துடனே உள்ளனர் மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் அபிமன்யு மாட்டிக் கொண்டதைப் போல மோடி ஆட்சியில் நாடு மாட்டிக் கொண்டுள்ளது -மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேச்சு
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பா.ஜ.க. ஒன்றிய அரசுக்கு கண்டனம்
வருகிற ஜூலை 27, சனிக்கிழமை, காலை 10.00 மணியளவில், மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
“பாஜக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் அளித்த பல வாக்குறுதிகள், இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்பது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது
வட மாநிலங்களையும், பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கும் அறிக்கையாக இல்லை தமிழ்நாட்டின் மீது பாஜக அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே இது காட்டுகிறது”
நயினார் நாகேந்திரன் ஆஜர்
நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் ஆஜர்
“பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, இதை திட்டமிட்ட மற்றும் நடைமுறை படுத்தியவர்களையும் கைது செய்ய வேண்டும்;
தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க சில கட்சிகள் முயற்சி செய்து வருகின்றனர், அதில் பாஜகவிற்கு முக்கிய பங்கு உண்டு” -சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பேட்டி