
மதுராந்தகம் தே.ஜ.கூ பொதுக் கூட்டத்தில் பேசிய அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, “2014இல் பிரதமராக பொறுப்பேற்று பின் தங்கிக் கிடந்த இந்திய துணைக் கண்டத்தை இன்று உலகமே வியக்கும் வண்ணம் மாற்றிய தலைவர் பிரதமர் மோடி; உலக பிரச்னைகளுக்கு இந்தியாவில் இருந்து தீர்வு கூறக்கூடிய தலைவராக அவர் இருக்கிறார்”என்று அவர் கூறினார்.