தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால தடை
அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால தடை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு எடப்பாடி பழனிசாமி மனுவுக்கு ஜன.27ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜர்
அறப்போர் இயக்கத்திற்கு எதிரான அவதூறு வழக்கில் டிசம்பர் 11ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், விக்கிரவாண்டி டோல்கேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு…
கடந்த தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கியில் 10 சதவிகித வாக்குகளை இழந்துவிட்டோம். அதை மீட்டெடுக்க வேண்டும்.
எனக்கு எந்த சம்மனும் வரவில்லை : சபாநாயகர் அப்பாவு!
நான் ஏதோ ஒரு கருத்தை சொல்லியதாக அதிமுக வழக்கறிஞர் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார். அது சம்பந்தமான எந்த விதமான சம்மனும் எனக்கு இதுவரை வரவில்லை. எனது சென்னை அலுவலகத்திலோ அல்லது முகாம் அலுவலகத்திற்கோ வரவில்லை. அனைத்து உதவியாளர்களிடமும் இது பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டேன். இருப்பினும் பத்திரிகை செய்திகளின் வாயிலாக நான் நீதிமன்ற சம்மனை மறுத்து திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்பட்டிருக்கிறது. நான் நீதிமன்றத்தை மதிக்கக் கூடியவன் வருகிற 13ம் தேதி சம்மன் வந்தாலும் […]
“விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம்”
விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2 ஆம் தேதி மகளிர் சார்பில் மது ஒழிப்பு மாநாடு – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
தாம்பரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து செம்பாக்கம் பேரூந்து நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிட்லபாக்கம்-, செம்பாக்கம் பகுதி செயலாளர் மோகன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா, முன்னாள் எம்.எல்.ஏ ப.தன்சிங், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் சேலையூர்.ஜி.சங்கர், சாந்தி புருஷோதமன், மாடம்பாக்கம் தேவேந்திரன், உள்ளிட்ட 1000க்கும் மேற்படட் அதிமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் தற்போது டிஜிபி அந்தஸ்தில் 16 அதிகாரிகள் உள்ள நிலையில் ஓய்வு பெற்ற டிஜிபியைதமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக நியமித்தது பணியில் உள்ள அதிகாரிகளின் உரிமையை பறிக்கும் செயல் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக இருந்த சீமா அகர்வால் தீடீரென மாற்றப்பட்டு செயற்கையான காலியிடம் உருவாக்கப்பட்டு அந்த இடத்தில் சுனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற அதிகாரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தால் மேற்கொள்ளப்படும் நியமனங்களில் […]
அதிமுக போட்ட பிச்சை-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்
முளைத்து மூன்று இலை கூட விடவில்லை அதற்குள் இரட்டை இலையை பற்றி அண்ணாமலை பேசுவதா அதிமுக போட்ட பிச்சையில் சட்டமன்றத்தில் 4 மாத எம்எல்ஏக்கள் உள்ளனர். சொந்தக் காலும் கிடையாது, செல்வாக்கும் கிடையாது” – அண்ணாமலையின் கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம் எதுவுமே இல்லாமல் பாஜக எங்களை பார்த்து பேசுவது வினோத வேடிக்கையாக உள்ளது. 2026ல் தனியாக நின்று தேர்தலை சந்தித்து பாருங்கள்.