
தாம்பரம் ரெயில்வே பரமரிப்பு பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட கார்களை ஏற்றி செல்லும் காலி சரக்கு ரெயில் மித வேகத்தில் சென்னையை நோக்கி இழுத்து செல்லப்பட்டது, மாலை சுமார் 7 மணியளவில் தாம்பரம்- சானடோரியம் இடையே சென்றபோது 8,9 மற்றும் 10 எனும் மூன்று காலி ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு வலதுபுரம் உள்ள தண்டவாளத்தையும் சேதப்படுத்தி நின்றது.
இந்த தகவல் அறிந்த உயர் ரெயில்வே துறை அதிகாரிகள் பார்வையிட்டு வழகமாக செல்லும் விரைவு ரெயில் மற்றும் புறநகர் ரெயில் பாதையில் சேதம் இல்லை என்பதை அறிந்து அதில் ரெயில்கள் இயக்க அனுமதித்தனர்.

அதே வேளையில் தடம்புரண்ட மூன்று பெட்டிகளை மீட்டு நிலை நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளர்.இரவுக்குள் மீட்பு பணி நடைபெறும் என்றும் அந்த நேரத்தில் இந்த இரண்டு ரெயில் பாதைகளில் முழுத் தடையை ஏற்படுத்தி பணி செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் சரக்கு ரெயில் தடம் புரல வேகமாக சென்று தீடீர் பிரேக் போட்டதன் காரணமா என்கிற கோணத்தில் ரெயில்வே அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.தடம் புரண்டது தனிப்பாதை என்பதால் ரெயில் போக்குவரத்து தடை ஏற்படவில்லை அல்லது முழு அளவில் ரெயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என தெரிகிறது