வேலூரில் இருந்து சென்னை தாம்பரம் சானடோரியத்திற்கு வரும் அரசு பேரூந்துகளில் திருமண முகூர்த்த தினம், அல்லது கோவில் விஷேச தினங்களில் பயணம் செய்யும் பெண்களிடம் நகை கொள்ளையடிப்பதாக 15 சவரன் நகையை பறிகொடுத்த மூன்று பெண்கள் தாம்பரம் போலீசில் புகார் கொடுத்தனர்.

இதன் அடிப்படையில் நகை பறிகொடுத்தவர்களிடம் முதலில் விசாரித்தபோது அருகிள் இருந்த பெண்ணிடம் இனிப்புகள், வெள்ளேரி காய் வாங்கி சாப்பிட்டபோது அரை மணி நேரம் மயக்கம் ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் மயக்கம் தெளிந்து பார்த்தால் பெண்ணையும் காணவில்லை நகையை பறித்து சென்றது தெரிய வந்ததாக கூறியுள்ளனர்.

இதனால் இதே மாதிரி பேரூந்துகளில் கைவரிசை காட்சி சிறைக்கு சென்ற பெண்களின் புகைப்படத்தை காட்டியபோது நாமக்கல் சேர்ந்தமங்கலத்தை சேர்ந்த ராணி(54) என்பவர் பிடிப்பட்டார். அவரை விசாரித்த போலீசார் வழக்கு தொடர்பாக நிதி மன்றத்தில் ஆஜர் ஆகும்போது விருதுநகரை சேர்ந்த பரமேஸ்வரன்(52) என்பவருன் ஏற்பட்ட பழக்கத்தால் அவருடன் சேர்ந்த் பெண் பயணிகளை பேரூந்துகளில் ஏமாற்றி மயக்கமடைய செய்ததும், பரமேஸ்வரனுக்கு மயக்கம் மட்டும் ஏற்படும் செடிகளின் விதைகள் தெரிந்த நிலையில் அதனை அரைத்து பொடியாக்கி இனிப்புகள் மீது தூவியும் அல்லது வெள்ளேரிகாய் மீது பொடியாக தூவியும் பெண் பயணிகளிடம் பேச்சு கொடுத்து பழகிய நிலையில் அவர்கள் மயங்கியதும் திருடி சென்றுள்ளனர்.

இவர்கள் மீது ஏற்கனவே திருச்சி நகரம், திண்டுக்கல், திருப்பூர் 6 காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளதாகவும், பரமேஸ்வரன் மாமன் திருட்டு தொழில் கற்றுக்கொடுத்த நிலையில் அதில் பட்ட பரமேஸ்வரனுக்கு மனைவி இரு பெண்கள் உள்ளனர் அவர்கள் மதுரையில் உள்ளதாகவும் அவர்களுக்கு பணம் அனுப்பியுள்ளான்.

அதுப்போல் பாலியல் தொழில் இருந்து பிட்பாக்கெட் செய்த ராணி பரமேஸ்வரனுடன் நட்பு ஏற்பட்டவுடன் ஒன்றாக தங்கி இருந்து பேரூந்துகளில் திருடிவந்துள்ளனர், இவர்களிடம் இருந்து
10 சவரன் நகையை மீட்ட நிலையில் தாம்பரம் குற்றவியல் நடுவர் முன்பாக ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.