
குரோம்பேட்டை, அஸ்தினாபுரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கலைஞர் பிறந்தநாள் விழா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில் பகுதி செயலாளர்கள் ஜோசப் அண்ணாதுரை, கருணாகரம் ஆகியோர் ஏற்பட்ட்டில் 1000 பேரூக்கு இனிப்புகளுடன் புடவைகள் வழங்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாளையொட்டி குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்ட திமுகவினர் கலைஞரின் திரு உருவபடத்திற்கு மலர்தூவி மறியாதை செய்தனர்.
குரோம்பேட்டையில் பகுதி செயலாளர் ஜோசப் அண்ணாதுரை ஏற்பாட்டிலும், அஸ்தினாபுரம் சாலையில் பகுதி செயலாளர் கருணாகரன் ஏற்பட்டிலும் 1000 பேரூக்கு இனிப்புகளுடன் புடவை, ரோஸ்மில்க் உள்ளிட்டவைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் க.வசந்தகுமாரி, துணைமேயர் காமராஜ், மண்டலகுழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை, சரண்யா மதுரைவீரன், சங்கீதா விஜய், பகுதி செயலாளர் இரா.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.