செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 41 வது வார்டு பகுதியில் சரவணா நகர் பூங்காவில் 2245 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியின் தொடக்க விழா நடந்தது
தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மரக்கன்று எடுத்துக் கொடுத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் திருமதி ராஜலட்சுமி, மேயர் திருமதி வசந்தகுமாரி கமலக்கண்ணன்* செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப்சந்திரன்* மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் மாநகராட்சி பொறியாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.சு.சிவராசு, இ.ஆ.ப., அவர்கள் தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் பகுதியில் அமைந்துள்ள MIT கல்லூரி வளாகத்தில் தூய்மையின் சேவைக்கான (Swachatta Hi Seva)விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு.சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.கருணாநிதி, மாநகராட்சிதுணை மேயர் திரு.கோ.காமராஜ், மண்டலக்குழு தலைவர்கள் திரு.வே.கருணாநிதி, திரு.ஜோசப் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பல்லாவரம் பகுதியில் 200 பேருக்கு புதிய ரேஷன் கார்டு
பல்லாவரம் தொகுதியில் 1, 2, 3 ஆகிய மண்டலங்களை சேர்ந்த 200 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. இ.கருணாநிதி எம்.எல்.ஏ புதிய ரேஷன் கார்டுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் கோ.காமராஜ் மண்டலக்குழு தலைவர்கள் ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, மாமன்ற உறுப்பினர்கள் புசிரா பானு நாசர், மங்கையர் திலகம் ராஜ்குமார், டிவி ராஜா, கீதா நாகராஜன், லதா சிவக்குமார், ரேணுகாதேவி பரமசிவம், மகேஸ்வரி கார்த்திகேயன், கலைச்செல்வி வெங்கடேசன், பிரேமலதா பண்டரி நாதன், முத்துக்குமார் மற்றும் […]
பல்லாவரத்தில் கருணாநிதி நினைவு நாள்
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு நாள் பல்லாவரம் தொகுதி திமுக சார்பில் குரோம்பேட்டையில் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் திமுகவினர் மலர்துவி புகழ் அஞ்சலி செலுத்தினார்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 6 ம் ஆண்டு நினைவுநாளையொட்டி பல்லாவரம் தொகுதி திமுக சார்பாக குரோம்பேட்டையில் மலர் அளங்காரம் செய்யப்பட்ட கலைஞரின் திரு உருவப்படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் தாம்பரம் துணை மேயர் ஜி.காமராஜ், மண்டலகுழு தலைவர்கள் ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி பகுதி செயலாளர்கள் பெர்ணட், […]
கோவை மாநகராட்சி மேயராக 29 வது வார்டு் திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு, உடனடியாக சான்றிதழை மாநகராட்சி ஆணையர் சிவகுருபாகரன் வழங்கினார்
தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் மற்றும் துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் முடிச்சூர் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்த மாநகராட்சியின் தனியார் ஒப்பந்தத் தூய்மைப்பணியாளர் தர்மண்ணா உடல் வைக்கப்பட்டுள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று, அன்னாரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக 29 வது வார்டை சேர்ந்த ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார்
தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலக மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி, ஆணையாளர் சீ.பாலச்சந்தர், மண்டலக் குழு தலைவர்கள், நிலைக் குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.
புதிய கமிஷனர் பதவியேற்பு
புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி கமிஷனர் பாலசந்தருக்கு மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி துணை மேயர் கோ. காமராஜ் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தாம்பரம் மாநகராட்சி புதிய கமிஷனர் பதவி ஏற்பு
தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய கமிஷனர் பதவியேற்பு மேயர் துணை மேயர் வாழ்த்து தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக பணிபுரிந்து அழகுமீனா பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக பணி மாற்றம் செய்யப்பட்டார். சேலம் மாநகராட்சி கமிஷனர் ஆக பதவி வகித்த பாலசந்தர் தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக பணி மாற்றம் செய்யப்பட்டார். இன்று தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் புதிய கமிஷனர் பாலச்சந்தர் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி கமிஷனர் பாலசந்தருக்கு மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி துணை மேயர் கோ. […]