பல்லாவரம் தெற்கு பகுதி திமுக சார்பில் குரோம்பேட்டையில் ஜி.எஸ்.டி சாலையில் தண்ணீர் பந்தலை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி திறந்து வைத்தார்.

சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் அதிக அளவு வணிக நிறுவனங்கள் செயல்படுகிறது. நாள் தோரும் பல ஆயிரம் பேர் வந்து செல்கிறார். கடும் கோடை வெயில் நிலவுவதால் மக்களின் தாகத்தை போக்கும் விதமாக அங்கு பல்லாவரம் தெற்கு பகுதி திமுக சார்பில் குரோம்பேட்டையில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி திறந்து வைத்து குளிர்ச்சி தரும் இளநீர், தர்பூசணி, கிர்ணிபழம், சப்போட்டா, நீர் மோர், குளிர்பானங்களை வழங்கினார்.

தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை, பகுதி செயலாளர் இ.எஸ்.பெர்ணாட், திமுக நிர்வாகிகள் சிலம்பரசன், வெங்கடேசன், மகேஸ்வரி கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்…