தாம்பரம் மாநகராட்சிக்கு 4 புதிய குடிநீர் லாரிகள்
ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக 9 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட 4 தண்ணீர் லாரிகள் மாநகராட்சி வாங்கப்பட்ட நிலையில் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, ஆணையாளர் சீ.பாலச்சந்தர் மக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கிவைத்தனர், இந்த நிகழ்ச்சியில்மண்டல குழு தலைவர்கள் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்
கர்நாடகா : காவிரியில் இருந்து நீர் வெளியேற்றம் 50500 கன அடியாக உயர்வு
கபினி அணையில் இருந்து வினாடிக்கு 45000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது
நீர்ச்சத்து குறைபாட்டால் ஏற்படும் தலைவலி
வெயிலில் அதிகம் நின்று வேலை செய்பவர்கள், மூலநோய் உள்ளவர்கள், உடலில் அதிகமாக சூடு உள்ளவர்கள் ஆகியோருக்கு நீர்ச்சத்து குறைந்து அதன் மூலம் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் தன் இயக்கத்திற்கு தேவையான நீரை உடலுக்குள் உள்ளதை உரிஞ்சிக் கொள்வதால், உடலில் நீர்ச்சத்துகள் குறைந்து விடுகிறது. இதனால் மூளைக்கு செல்லும் இரத்த அளவின் வேகம் குறைந்து தலைவலி ஏற்படுகிறது. சிலருக்கு தலையின் நரம்புகள் கூட புடைக்கலாம். இது அனைவருக்கும் ஏற்படும் சாதாரண நிகழ்வுதான். பயப்பட தேவையில்லை. இது போன்று […]
கேளம்பாக்கத்தில் குடிநீர் குழாய் மீது லாரி மோதல் குடிநீர் ஆறாகப் பாய்ந்தது
கேளம்பாக்கம் அருகே வீராணம் குடிநீர் ராட்சத குழாய் மீது டாரஸ் லாரி மோதியதில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீனாகியது. கேளம்பாக்கம்-வண்டலூர் சாலை மாம்பாக்கம் பகுதியில் சென்னையை நோக்கி பாதிக்கப்பட்ட வீராணம் குடிநீர் ராட்ச குழாய் இணைப்பு மீது கேளம்பாக்கம் நோக்கி சென்ற டாரஸ் லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வெளியேறி வீனாகியது. இதனை வெகுநேரமாக தடுக்காமல் குடிநீர் வெளியேறியதை அப்பகுதியில் செல்வோர் பார்தவாறு சென்றனர்.
பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் பிரமாண்ட நீர் மோர் பந்தலை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்துவைத்தார்
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தாம்பரம் மாநகரம் பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் பகுதி கழக செயலாளர் தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டல குழுத் தலைவர் வே.கருணாநிதி அவர்கள் ஏற்பட்டில் பம்மல் மண்டல அலுவலகம் அருகில் அமைக்கப்பட்ட நீர்-மோர் பந்தலை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர், குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்து மோர், தர்பூசணிபழம், இளநீர், கிர்ணிபழம், ரோஸ் மில்க், பாதாம் மில்க், பிஸ்தா மில்க், சாக்லேட் […]
குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் திமுக தண்ணீர் பந்தல் திறப்பு
பல்லாவரம் தெற்கு பகுதி திமுக சார்பில் குரோம்பேட்டையில் ஜி.எஸ்.டி சாலையில் தண்ணீர் பந்தலை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி திறந்து வைத்தார். சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் அதிக அளவு வணிக நிறுவனங்கள் செயல்படுகிறது. நாள் தோரும் பல ஆயிரம் பேர் வந்து செல்கிறார். கடும் கோடை வெயில் நிலவுவதால் மக்களின் தாகத்தை போக்கும் விதமாக அங்கு பல்லாவரம் தெற்கு பகுதி திமுக சார்பில் குரோம்பேட்டையில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி திறந்து வைத்து குளிர்ச்சி […]
தாம்பரம் மாநகராட்சி, 5வது மண்டல பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கத்தில் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், மண்டலக்குழு தலைவர் எஸ்.இந்திரன் தலைமையில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார்
மேலும், அப்பகுதி மக்களுக்கு நீர்மோர் உள்பட பல்வேறு குளிர்பானங்களை வழங்கினார். இதில் மேயர் வசந்தகுமாரி, மண்டலக்குழு தலைவர் டி.காமராஜ், மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தாம்பரம் பேருந்து நிலையத்தில் தாம்பரம் போக்குவரத்து போலீசார் ஏற்பாட்டில் நீர் மோர், தண்ணீர் பந்தலை போக்குவரத்து உதவி ஆணையாளர் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி துவக்கி வைத்தார்
கேளம்பாக்கத்தில் திமுக தண்ணீர் பந்தல் திறப்பு
திருப்போரூர் அருகே கேளம்பாக்கம் ஊராட்சியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்க வேண்டுமென கழக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். அதன் பெயரில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கேளம்பாக்கம் ஊராட்சியில் திமுக ஊராட்சிமன்ற தலைவர் ராணி எல்லப்பன், ஏற்பாட்டில் தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், […]
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 57% அளவுக்கு நீர் இருப்பு உள்ளதால் கோடை காலத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்படாது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது
சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 6,702 மில்லியன் கனஅடி அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. இது ஏரிகளின் மொத்த கொள்ளளவில் 57% ஆகும். சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் ஒரு டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது 5 ஏரிகளில் மொத்தமாக 7 டி.எம்.சி. குடிநீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தவிர நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் செயல்பட்டு வரும் கடல்நீரை […]