தாம்பரம் அருகே புரோகிதர் வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயன்று முடியாததால் 27 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் லாக்கருடன் திருடி சென்ற சம்பவம் கொலை வழக்கு குற்றவாளி மற்றும் கால் டாக்சி ஓட்டுனர் இருவரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

சென்னை சிடலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் புரோகிதர் ரங்கராஜன் கடந்த ஐந்தாம் தேதி தனது குடும்பத்திபருடன் மயிலாப்பூரில் உள்ள தனது உறவினர் நிகழ்ச்சியில் கலந்துவிட்டு மூன்று நாட்களுக்கு பிறக்கு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது முன் பக்க கதவின் பூட்டு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிச்சியடைந்த ரங்கராஜன் பின்பு உள்ளே சென்று பார்த்த போது தங்க நகைகள் வைக்கபட்டிருந்த லாக்கரை உடைக்க முயன்ற மர்ம நபர்கள் உடைக்க முடியாததால் 27 சவரன் தங்க நகைகள்,மற்றும் ஒரு கிலோ வெள்ளி உடன் இருந்த 70 கிலோ எடை கொண்ட லாக்கரை எடுத்து சென்றது தெரியவந்துள்ளது.

கொள்ளை சம்பவம் குறித்து ரங்கராஜன் சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து சிசிடிவி காட்சிகளை பார்த்த போது மர்ம நபர்கள் காரில் லாக்கரை கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து காரின் என்ணை கொண்டு ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த கால் டாக்சி ஓட்டுனர் குமரன் என்பவரை கைது செய்த போலீசார் மூளையாக செயல்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த செந்தில் என்கிற வெள்ளை செந்தில் இவர் மீது நான்கு கொலை வழக்கு, கொலை முயற்ச்சி என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் என்ற மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.