
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகத்தில் இன்று 6 ம் கட்டமாக 19 மாவட்ட செயலாளர் பதவி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட செயலாளராக சரத்குமார் என்பவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பனையூரில் இருந்து தாம்பரம் வந்த அவருக்கு த.வெ.கவினர் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.புதிய மாவட்ட செயலாளர் வருவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னரே தாம்பரத்தில் எப்போது பரப்பரபாக உள்ள பேருந்துநிலையம் ஜி.எஸ்.டி. சாலையில் தொண்டர்கள் குவிய தொடங்கினர்.இந்த நிலையில் 2மணி நேரம் கழித்து
தாம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வடமேற்கு மாவட்ட செயலாளராக பதவி பெற்ற சரத்குமார் திறந்தவெளி காரில் ஊர்வலமாக வந்தடைந்தார்.தவெகவினர் ஏராளமானோர் திரண்டதால் தாம்பரம் பேருந்து நிலையம் பகுதியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.இந்தநிலையில் அம்பேதகர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, மாவட்ட செயலாளர் வீட்டிற்கு ஊர்வலமாக புறப்பட்டனர். இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அம்பேத்கர் சிலைக்கு மட்டும் காவல்துறையினரிடம் அனுமதி பெற்றுவிட்டு அங்கிருந்து வீடு வரை பேரணியாக சென்றனர்,
இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.