மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டத்தால் தமிழகத்தில் 75 சதவீகித வாக்களர்கள் பயணாளியாக உள்ளனர். ஆனால் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் மோடி உள்ளதால் திமுக தொண்டர்கள் வடையை காண்பித்து தங்களின் மன நிலை வெளிப்படுத்துகிறார்கள் தாம்பரத்தில் டி.ஆர்.பாலு பேச்சு:-

தாம்பரத்தில் தமிழக முதலமைச்சர் 71வது பிறந்தநாள் நலத்திட்டம் வழங்கும் விழா, தமிழக நிதிநிலை அறிக்கை விளக்கப்பொது கூட்டம், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் நடைபெற்றது.

தொகுதி பார்வையாளர் மருதுகணேஷ், மண்டலகுழு தலைவர்கள் டி.காமராஜ், ஜெயபிரதிப் சந்திரன், கவுன்சிலர்கள், ஜெகன், சுரேஷ், ரமணி ஆதிமூலம், பெரியநாயகம், ஜோதிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் கலந்துக்கொண்ட திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேசுபோது:- நான் மேடைக்கு முன்னால் இருந்தபோது திமுக நிர்வாகிகள் மோடியை வாயால் வடை சுடுகிறார் என்பதை தெரிவிக்கும் வகையில் வடையை காட்டி தெரிவித்தனர். பார்பதற்கு சிரிப்பாக இருந்தாலும் பிரதமரை இப்படி விமர்சனம் செய்வதை தவிர்க்கவேண்டும். ஆனால் தமிழகத்திற்கு ஏம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரெயில் திட்டப்பணியில் மத்திய அரசின் பங்கு உள்ளிட்ட பல்வேறு விதங்களில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை இதனால் தான் திமுகவினர் மோடியை வாயால் வடை சுடுபவர் என வடையை காட்டி தெரிவித்து தங்களின் நிலையை வெளிப்படுத்துகிறார்கள்.

திமுக இருக்காது என கூறுபவர்களுக்கு திமுக தொண்டன் எழுச்சியடைந்தால் என்ன நடக்கும் என தெரிந்துகொள்ளவேண்டும் என்றார்.

தமிழக முதலமைச்சரின் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களால் தமிழ்நாட்டில் 75 சதவீகித வாக்காளர்கள் பயனாளர்களகாக உள்ளனர் என்றார்.

மாநிலங்கலவை உறுப்பினர் திருச்சி சிவா பேசும்போது:-

அதிமுக பொதுச் செயலாளர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவானவர் என பேசுகிறார். ஆனால் பாஜக இஸ்லாமியர்களுக்கும் இலங்கை தமிழகளுக்க்கும் எதிராக கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்தவர்தான், அதனால் தான் ஒன்றரை லடசம் இலங்கை தமிழர்களுக்கு குடியுறிமை பெறமுடியாமல் போனது, ஆனால் இன்று கூட்டணி இல்லை என பேசலாம் அன்று அவர்கள் அளித்த 13 வாக்குகள் தான பாதிப்புக்கு காரணம் இதனை காழ்புணர்ச்சிகாக பேசவில்லை பொறுப்புணர்ந்து பேசுகிறேம் என்றார்.

இதனையடுத்து 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பொதிமக்களுக்கு நலத்திட்டமாக வழங்கப்பட்டது