தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 30 வது வார்டு துர்கா நகர் பிரதான சாலையில் தமிழக அரசின் மக்கள்முதல்வர் மருந்தகம் துணை மேயர் கோ காமராஜ் திறந்து வைத்தார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 30 வது வார்டு துர்கா நகர் பிரதான சாலையில் தமிழக அரசின் முதல்வர் மருந்தகத்தை தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ் திறந்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் த.ஜெயக்குமார்.ஸ்ரீதர் சந்திரன் பாபு, குமரேசன்ஜீ, ஜோசப்,பாலாஜி, ஆண்டவன், முரளி மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்