இலக்கியத்தின்‌ மூலமாக தலித்‌ மக்களின்‌ குரலாக ஒலித்து, சமூக தொண்டாற்றி வரும்‌ ஃபாஸ்டினா சூசைராஜ்‌ (ஏ) பாமா அவர்களுக்கு 2024-ஆம்‌ ஆண்டிற்கான ஔவையார்‌ விருதினை வழங்கிச்‌ சிறப்பித்தார்கள்‌. இந்நிகழ்ச்சியில்‌, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌, சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறை அமைச்சர்‌ கீதா ஜீவன்‌, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்‌ கனிமொழி கருணாநிதி, தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா, சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறை செயலாளர்‌ ஜெயஸ்ரீ முரளிதரன்‌, சமூக நல ஆணையர்‌ வே.அமுதவல்லி, மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.