சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகசநிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்டநெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது
சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனிகூடுவதையும் தவிர்க்க வேண்டும். கனிமொழி M.P., டுவிட்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
இன்று (27.9.2024) புதுதில்லியில்,அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களைசந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, கழக மக்களவை குழுத் தலைவர் திரு. டி.ஆர்.பாலு, கழகநாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமதி கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில்
இலக்கியத்தின் மூலமாக தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூக தொண்டாற்றி வரும் ஃபாஸ்டினா சூசைராஜ் (ஏ) பாமா அவர்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ […]
தூத்துக்குடி காய்கறி சந்தையில், மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளையொட்டி சி.ஐ.டி. காலனி இல்லத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்
உடன், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அவரது கணவர் அரவிந்தன் ஆகியோர் உள்ளனர்.
திமுக காணாமல் போகும் என்று சொன்ன பலர் காணாமல் போயிருக்கிறார்கள்
சென்னை விமான நிலையத்தில் கனிமொழி பேச்சு மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய பாஜக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் கருணாநிதிக்குகிடைத்த வெற்றி – கனிமொழி
கனிமொழி எம்.பி தனது தாயாருடன் விஜய்காந்தின் இல்லம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்
“மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைக்கச் செல்ல முயற்சித்தபோது, அவர்கள் வர மறுத்துவிட்டனர்..”
-மீட்பு பணிகளில் ஏற்பட்ட சிரமம் குறித்து கனிமொழி எம்.பி. பேட்டி
தூத்துக்குடி, விளாத்திகுளம் அருகே பெற்றோரின் வற்புறுத்தலால் காலை உணவை புறக்கணித்த பள்ளி குழந்தைகள்.
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பட்டியலின பெண் சமைத்த உணவை புறக்கணித்த மாணவர்கள் ….. திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை பள்ளிக் குழந்தைகள் காலை உணவு சாப்பிடுகிறார்களா? எனவும் ஆய்வுபள்ளி குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து சாப்பிட்ட எம்.பி. கனிமொழி.
ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான செயல்திட்டத்தை ஆர்எஸ்எஸ் தான் இயற்றுகிறதா?”
பாரத குடியரசுத் தலைவர் என்ற பெயரில் அழைப்பிதழ்கள் வந்து இதுவரை நாங்கள் பார்த்ததில்லை; அழைப்பிதழ்கள் எப்போதும் ‘இந்திய குடியரசுத் தலைவர்’ அல்லது ‘இந்திய பிரதமர்’ என்று தான் அச்சிடப்படும்; இப்போது ஏன் இதைச் செய்தார்கள்? இதற்கான உள்நோக்கம் என்ன? இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன?; இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என சமீபத்தில் தான் ஆர்எஸ்எஸ் தலைவர் கூறியிருந்தார்; தற்போது இந்த அழைப்பிதழை பார்க்கும்போது பல கேள்விகள் எழுகிறது;-கனிமொழி எம்.பி பேட்டி.