புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்
சென்னை,தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக தற்போது முதல்-அமைச்சரின் தனி செயலாளராக இருக்கும் முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முருகானந்தம் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர். நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதல்வரின் முதன்மைச் செயலாளராக பொறுப்பு வகித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில்
இலக்கியத்தின் மூலமாக தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூக தொண்டாற்றி வரும் ஃபாஸ்டினா சூசைராஜ் (ஏ) பாமா அவர்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ […]
ஜூலையில் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் தொடக்கம்
அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். உடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், மதுரை மாவட்டம், யா.கொடிக்குளம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தினை தானமாக வழங்கிய உ.ஆயி அம்மாள் என்கிற பூரணம் தன்னலமற்ற கொடை உள்ளத்தை பாராட்டி அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதினை வழங்கி சிறப்பித்தார். உடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்கொத்து வழங்கி வரவேற்றார். உடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளார்
சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவிற்கு வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முப்படைகளின் உயர் அலுவலர்கள், தமிழ்நாடு காவல்துறை உயர் அலுவலர்கள் ஆகியோரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். உடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளார்
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜனவரியில் ‘உலக முதலீட்டாளர் மாநாடு’ நடக்க உள்ளதை ஒட்டி, முன்னேற்பாடு பணிகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு செய்தார்
மாநகராட்சி ஆணையர், மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்
தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர் சந்திப்பு!
மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுடன் முதலமைச்சர் நேரடியாக பேசி பாதிப்புகளை கேட்டறிந்தார். ஸ்ரீவைகுண்டத்திலேயே உணவு சமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைவாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை.
தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா பேட்டி
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு. தென்மாவட்டங்களில் ஒரு சில இடத்தில் மட்டுமே அதிகனமழை பெய்யும் என தெரிவித்திருந்தது. தென்மாவட்ட பெருமழை பாதிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 60% இடங்களில் மின்சாரம் இல்லை. தண்ணீர் வடிந்ததும் மின் இணைப்பு சீர் செய்யப்படும். ராமநாதபுரம், குமரியில் இருந்து 326 படகுகள் கொண்டு வரப்பட்டு மீட்பு பணி நடக்கிறது. வெள்ளம் வடிந்ததும் சேதம் கணக்கிடப்பட்டு நிவாரணம் வழங்கப்படும். இதுபோல வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை பெய்யும் […]