உதயநிதி குறித்து விமர்சனம்: ஆதவ் அர்ஜுனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருமாவளவனுக்கு ராசா வலியுறுத்தல்

ஈரோடு: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்து விமர்சனம் செய்தவிசிக துணை பொதுச் செயலாளர்மீது திருமாவளவன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதிமுக துணைப்பொதுச்செயலாள ரும் எம்.பி.யுமான ஆ.ராசா வலியுறுத்தி உள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவுடனான கூட்டணி குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். திமுகவினர் கொந்தளிப்பு: குறிப்பாக, அமைச்சர் உதயநிதியைக் குறிவைத்து, ‘சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் […]

தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் 1 மணி நேரத்திற்கு மேலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட ஆலோசனை நிறைவு உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு மாற்றம் ஒன்றே மாறாதது என கூறியிருந்தார் முதல்வர்.

ராதா நகர் சுரங்கப்பாதை பணிகளை ஆய்வு செய்த உதயநிதி

குரோம்பேட்டையில் கடந்த 10 ஆண்டுகளாக ரூ.43.74 கோடியில் நடைபெறும் ராதாநகர் ரெயில்வே சுரங்கப் பாதை பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். குரோம்பேட்டை ராதா நகர் ரயில்வே கேட் எல்.சி.,-27 அமைந்துள்ள பகுதியில் சுரங்கப் பாதை 2008ம் ஆண்டு பணிகள் தொடங்கின. ரயில்வே பகுதியில் பணிகள் முடிந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஆட்சி மாற்றம் காரணமாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் கடந்த […]

சென்னை, வண்டலூர், பி.எஸ்.அப்தூர் ரகுமான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனக் கூட்டரங்கில்

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.கா.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் திருமதி வரலட்சுமி மதுசூதனன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தலைவர் திரு.திண்டுக்கள் ஐ.லியோனி, பள்ளிக் கல்வித்துறை அரசுச் […]

முத்தமிழறிஞர் கலைஞர் 6-வது ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

இந்நிகழ்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

தலைமைச் செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்

விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பணியில் 3% பணி வழங்குவது மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதியதாக அமைக்கப்படவுள்ள சர்வேதச கிரிக்கெட் மைதானம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, கூடுதல் தலைமைச் செயலாளர்கள், அரசு முதன்மைச் செயலாளர்கள், காவல் […]

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில், நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி & நிகோலாய் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு

மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். உடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் உள்ளனர்.

தமிழ்நாடு சட்டபேரவையில் தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள T.T.K நகர் விளையாட்டு மைதானத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டரங்கம் அமைக்கபடும் என அறிவித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்-.ஆர்.ராஜா தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த போது எடுத்தபடம்.